தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
நடிகை ராஷ்மிகா வாரிசு படத்தை தொடர்ந்து, தமிழில் ரெயின்போ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பாலிவுட்டில் பிஸி: ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்ற ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார். அமிதாப் பச்சனுடன் இணைந்து குட்பை என்ற படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ரன்பீர் கபூர் உடன் அனிமல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 11ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
மேனேஜர் பணமோசடி: நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட நாட்களாக மேனேஜராக இருந்த நபரை நடிகை ராஷ்மிகா அதிரடியாக நீக்கி உள்ளார். அவர் சுமார் 80 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டதால், இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் ராஷ்மிகா, சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே அவருக்கு மேனேஜராக பணியாற்றி வந்த மேனேஜர் துரோகம் செய்தால் ராஷ்மிகா கவலையில் இருப்பதாக தகவல் இணையத்தில் பரவியது.
எங்கள் பிரிவு சுமூகமானது: இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,தங்களுக்கு இடையே எந்தவித மோதலும் இல்லை. இந்த பிரிவு சுமூகமானது தான். நாங்கள் இருவரும் இனிமேல் சுதந்திரமாக வேலை செய்ய முடிவெடுத்து உள்ளோம். எங்கள் பிரிவை பற்றி இணையத்தில் பரவும் செய்தியில் துளியும் உண்மையில்லை எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராஷ்மிகா. மேனேஜர் உடனான பிரிவு குறித்து நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.