நாக சைதன்யா ஷோபிதா துலிபாலா திருமணம்.. சமந்தா போட்ட போஸ்ட் என்ன தெரியுமா?

post-img

சென்னை: சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவுக்கு, நடிகை சோபிதா துலிபாலாவுடன் இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடந்துள்ள நிலையில் நடிகை சமந்தா போட்ட இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி கதநாயாகியாக இருப்பவர் சமந்தா. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள சமந்தா தற்போது பல்வேறு படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதேபோல, தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான நாகர்ஜூனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
பெஸ்ட் கபிள்ஸ் என்று எல்லோராலும் பாரட்டப்பட்டு வந்த இவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் இவர்களது திருமண உறவு நான்கு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். நாகசைதன்யாவின் திருமண முறிவுக்குப் பின் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா. இதனால், மனதளவிலும், உடல் ரீதியாகவும் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வந்தார் சமந்தா.
இந்நிலையில், நாகசைதன்யாவுக்கும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மெஹந்தி முதல் ஹல்தி வரை நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் திருமணம் களைகட்டி வருகிறது. இவர்களின் டும் டும் டும் தான் இப்போது திரையுலகின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
இன்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டியோஸில் நாகசைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் நடைபெற்றது. இதில், தெலுங்கு, மலையாளம், தமிழ் என திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த வாரத்தில் நடிகை சமந்தாவின் தந்தை காலமானார். ஒரு பக்கம் தந்தை காலமான துயரம், மற்றொரு பக்கம் தனது முன்னாள் கணவருக்கு இன்று திருமணம் என்று நடிகை சமந்தா இருவிதமான கசப்பான சம்பவங்களை கடக்கும் சூழ்நிலையில் உள்ளார்.
இந்நிலையில், சமந்தா சில தினங்களுக்கு முன்பு போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "ஃபைட் லைக் ஏ கேர்ள்" அதவாது ஒரு பெண் போல சண்டை செய் என்று குறிப்பிட்டு சிறிய பெண் குழந்தை ஒன்று சிறுவனிடம் சண்டையிடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறியும், அவரது பதிவைப் பாராட்டியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Post