புத்தாண்டு 2025: பணமழை கொட்டப்போகும் 7 ராசிகள்.. உங்க ராசி இருக்கானு பாருங்க

post-img
புத்தாண்டு பலன் 2025: இன்னும் இரண்டு வாரங்களில் 2025 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இத்தனை வருடங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடியல் கிடைத்துவிடதா என அனைத்து ராசிகளுமே மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள். 2025 புத்தாண்டில் சனி, குரு, ராகு ஆகிய மூன்று கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன. இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த ராசிகளுக்கு பணம் வரவு அதிகரிக்கும் என்ற விரிவான தகவல்களை காணலாம். ரிஷபம்: இந்த வருடத்தில் ரிஷபம் ராசிக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கப் போகின்றன. இரண்டாவது இடத்தில் குரு பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பகவான் செல்வ செழிப்புக்கு அதிபதி. அது தன ஸ்தானம் என்பதால் தங்கமும் அதிகம் வரப்போகிறது. குரு பகவான் 11வது இடமான லாபஸ்தானத்தில் இருந்து, இரண்டாவது இடமான தன ஸ்தானத்துக்கு வருவதால் லாபம் அதிகரிக்கும். ஐந்தாம் இடமாக யோக ஸ்தானத்தை சனி பகவான் பார்க்க உள்ளார். சனி ஐந்தாவது இடத்தைப் பார்ப்பது நல்ல பயன்களை தரும். பத்தாவது இடத்தில் ராகு, 11வது இடத்தில் சனி பகவான் இருப்பதால் தொழில் விருத்தி அடையும். தொழிலில் புதிய சாம்ராஜ்யம் படைக்கும் அளவுக்கு முன்னேற்றம் இருக்கும். பத்தாம் இடத்தில் உள்ள ராகுவை ஒன்பதாம் பார்வையாக குரு பகவான் பார்வையிட உள்ளார். இது அருமையான பலன்களை கொடுக்கும். மொத்தத்தில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து பண வரவு கொட்டும். மிதுனம்: மிதுனம் ராசிக்கு, ராசியிலேயே குரு பகவான் வரவுள்ளார். குரு பகவான் ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் இடங்களை பார்க்கவுள்ளார். ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானம், யோகத்தையும் மற்றும் ஏழாம் இடமான திருமண யோகத்தையும் பார்க்கிறார். பிரிந்து சென்று கணவன் - மனைவி இணைவார்கள். திருமணத்துக்காக காத்திருப்போருக்கு திருமணம் வரம் கைக்கூடும். அடுத்ததாக ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் குரு பகவான் பார்க்கிறார். அதனால் அதிர்ஷ்டங்கள் கொட்டும். கடகம்: கடகம் ராசி இதுவரை அஷ்டம சனியால் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டிருப்பார்கள். இந்த 2025 வருடம் உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தைத் தரும். குரு பகவான் 12வது இடத்துக்கு வந்து சுப விரயங்களை உண்டாக்குவார். பண வரவு அதிகரிப்பதால் இத்தனை நாட்கள் செய்ய நினைத்து காத்திருப்பில் வைத்திருந்த பணிகளை எல்லாம் ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். சனி ஒன்பதாவது இடத்துக்கு செல்வதும் நல்ல பலன்களை கொடுக்கும். துலாம்: துலாம் ராசிக்கு அஷ்டமத்தில் இருந்த குரு ஒன்பதாவது இடத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானம் என்பதால் இது மிகச்சிறப்பான பயன்களை தரும். ஐந்தாம் இடத்தில் இருக்கும் ராகு, ஆறாம் வீட்டில் உள்ள சனி பகவான் ஆகியவற்றால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டங்களும் அதிகரிக்கும். விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கு சனி பகவான் ஐந்தாம் இடத்துக்கு வருகிறார். அதியோக பலனால் சொத்துகள் சேரும். சுயமாக தொழில் தொடங்க ஆசைப்படுவோருக்கு முயற்சிகள் கைக்கூடும் சிறப்பான வருடம். சனிபகவான் தன ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் பணவரவு மற்றும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கும்பம்: கும்பம் ராசிக்கு சனி இரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். யோக ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் குரு உள்ளார். தொழில் பல மடங்கு வெற்றியை தரும். மீனம்: மீனம் ராசிக்கு சனி பகவான் உங்களின் மூன்று, ஏழு மற்றும் பத்தாம் இடத்தை பார்க்க உள்ளார். மூன்றாம் இடமான தைரிய ஸ்தானம், ஏழாம் இடமான வெளிநாட்டு தொடர்பு உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும்.

Related Post