அகிலமே அணி திரண்டது காண்! டெல்லியில் ஜி-20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாட

post-img

டெல்லி: உலக அளவில் மிக முக்கியமான ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நாளையும் நாளைமறுநாளும் தொடங்க உள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உட்பட உலகின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு நமது இந்தியா தலைமை வகிக்கிறது.
டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து தலைவர்களை வரவேற்பதில் தலைநகரம் டெல்லி மும்முரமாக இருக்கிறது.
டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடு தொடர்பான 20 முக்கிய அம்சங்கள்
1. 1.ஜி-20 கூட்டமைபின் முதலாவது கூட்டம் 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது.
2.ஜி 20 கூட்டமைப்பு மொத்தம் 17 உச்சி மாநாடுகளை நடத்தி உள்ளது.
3.ஜி 20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
4.ஜி 20 கூட்டமைப்பு நாடுகள்:
1.அமெரிக்க
2.அர்ஜென்டினா
3.ஆஸ்திரேலியா
4.பிரேசில்
5.கனடா
6.சீனா
7.பிரான்ஸ்
8.ஜெர்மனி
9.இந்தியா
10.இந்தோனேசியா
11.இத்தாலி
12.ஜப்பான்
13.கொரியா
14.மெக்சிகோ
15.ரஷ்யா
16.சௌதி அரேபியா
17.தென்னாப்பிரிக்கா
18.துருக்கி
19.இங்கிலாந்து
20.ஐரோப்பிய ஒன்றியம்


5.ஜி 20 உச்சி மாநாடுகளுக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் நாடு சிறப்பு விருந்தினர்களாக சில நாடுகளின் பிரதிநிதிகளை அழைப்பது வழக்கம். டெல்லி உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ள சிறப்பு விருந்தினர் நாடுகள்:
1.வங்கதேசம்
2.எகிப்து
3.மொரிஷியஸ்
4.நெதர்லாந்து
5.நைஜீரியா
6.ஓமன்
7.சிங்கப்பூர்
8.ஸ்பெயின்
9.ஐக்கிய அரபு அமீரகம்
6.உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜி20 நாடுகள் பங்களிப்பு 85%; உலக வர்த்தகத்தில் பங்களிப்பு 75%. உலக மக்கள் தொகையில் 70%.
7.ஜி 20 18-வது உச்சி மாநாட்டை முன்னிட்டு இதுவரை மொத்தம் 18 அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜி 20 உச்சி மாநாட்டை முன்வைத்து 56 இடங்களில் இந்தியாவில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
8.அடுத்த ஜி20 மாநாட்டை பிரேசில், தென்னாப்பிரிக்கா நடத்தும்.
9.ஜி20 டெல்லி உச்சி மாநாட்டில் சீனா அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை; அவருக்கு பதில் சீனாவின் பிரதமர் லி கியாங் பங்கேற்கிறார்.
10.ஜி 20 டெல்லி உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்கவில்லை.
11.ஜி 20 டெல்லி உச்சி மாநாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் தலைவர்கள், மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவல் ஆகியோரும் பங்கேற்கவில்லை.
12.ஜி20 டெல்லி உச்சி மாநாட்டுக்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடா வருகை உறுதியாகவில்லை.
12.ஜி 20 டெல்லி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம்:

#G20SummitDelhi || 
Exclusive visuals from #BharatMandapam, which is the venue of #G20 Summit. The summit will begin on Saturday. A 28 feet Nataraja Statue has been installed in front of Bharat Mandapam.#AIRVideo - Dipendra kumar pic.twitter.com/gqB8NChZxA

1.அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
2.ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ்
3.இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
4.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
5.கனடா பிரதமர் ட்ரூடோ
6.ஜெர்மன் அதிபர் ஒலாஃப்
7.ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா
8.தென் கொரியா அதிபர் சுக் யோல்
9.செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்
10.வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
11.துருக்கி அதிபர் எர்டோகன்
12.அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ்
13.நைஜீரியா அதிபர் போலா டினுபு
14.ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 9-ந் தேதி விருந்து அளிக்கிறார். இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
15.டெல்லி உச்சி மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் டெல்லி போலீஸ், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என மொத்தம் 1,30,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
16.45,000 பாதுகாப்பு படையினர் நீல உடையில் கண்காணிப்பு பணி மேற்கொள்வர்.
17.ஜி 20 உச்சி மாநாட்டை முன்னி டெல்லி மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
18.டெல்லி விமான நிலையத்துக்கு வருகை தருகிற, புறப்படுகிற தலா 80 விமான சேவைகளும் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
19.ஜி 20 உச்சி மாநாட்டின் முகப்பில் பிரம்மாண்டமான 28 அடி உயர நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் சுவாமி மலையில் உருவாக்கப்பட்டது.
20.ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்களுக்காக டெல்லியின் அனைத்து நட்சத்திர விடுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

 

Related Post