சென்னை: தமிழ் சினிமாவில் ஃபைட் மாஸ்டர் ஆகவும், இயக்குனராகவும் வில்லன் நடிகராகவும் இருக்கும் ஸ்டண்ட் சிவாவின் மனைவி மற்றும் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
அதே நேரத்தில் பிரபல சேனல் ஒன்றில் அவர் தன்னுடைய ஆரப்ப காலம் குறித்தும் தான் எப்படி சினிமாவில் அடி எடுத்து வைத்தேன் என்பது குறித்தும் ஸ்டண்ட் சில்வா மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டான்ட்லி மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரித்து பின்பு வில்லனாக பல முன்னணி நடிகர்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் ஸ்டண்ட் சில்வா பற்றி பல தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
பலருடைய இயல்பான குணம் வேராக இருக்கும் ஆனால் வெளித்தோற்றத்தை பார்க்கும் போது அவர்களை சற்றும் யூகிக்க முடியாத வகையில் இருப்பார்கள். அந்த மாதிரி தான் ஸ்டண்ட் சில்வாவும் இருக்கிறார். இவர் நிஜத்தில் பார்ப்பதற்கு கரடு முரடான கோவக்காரர் போல இருப்பவர். ஆனால் நிஜத்தில் ரொம்பவும் அமைதியான கேரக்டராம்.
ஸ்கூல் படிக்கும்போதே சில்வா ஹாஸ்டலில் தங்கி தான் படித்திருக்கிறார். அப்போது 500 பேர் இருக்கும் இடத்தில் தனியாக ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது நானாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு யார் கூடவும் சேர மாட்டேன். தனியாகவே இருப்பேன். தனிமை தான் எனக்கு ரொம்பவே பிடிக்கும். நான் யாரிடமும் பேசி பழகுவதற்கு ரொம்பவே பயப்படுவேன். அதுவும் பெரிய பசங்களை பார்க்கும்போது எனக்குள் அவ்வளவு பயம் இருக்கும். அதனால் நான் தனிமையாக தான் இருப்பேன் என்று சில்வா கூறி இருக்கிறார்.
அத்தோடு தூத்துக்குடியை சொந்த ஊராகக் கொண்ட இவருக்கு ஸ்கூல் படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று ரொம்பவே ஆசையாம். ஆனால் பத்தாம் வகுப்பை தாண்ட முடியவில்லையாம். படிப்பு ஏறாததால் படிப்பை பத்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டு அதற்குப் பிறகு டிப்ளமோ கோர்ஸ் படித்திருக்கிறார். ஆனால் படித்ததற்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வது போலத்தான் இவருக்கு ஒரு ஹாஸ்பிடலில் பியூன் வேலை கிடைத்திருக்கிறது.
அதிலிருந்து தான் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் செவிலியராக படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததும் அங்கு படித்து இவரும் அங்கு வேலையை தொடங்கி இருக்கிறார். ஆனால் அந்த சம்பளம் போதாது என்று தான் இவர் தன்னுடைய நண்பர் மூலமாக சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் டான்ஸ் மூலமாக சினிமாவில் அறிமுகமாகலாம் என்று நினைத்திருந்த நிலையில் அதற்கான சரியான வாய்ப்பு அமையாததால் தான் இவர் சண்டை காட்சிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அதற்குப் பிறகுதான் நடிகர் விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு பைட் மாஸ்டர் ஆக மாறியிருக்கிறார். தற்போது சினிமாவில் இவர் வில்லனாக நடித்தும் திரைப்படங்களை இயக்கியும் வருகிறார். இந்த நிலையில் இவருடைய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவிலும் சாதித்து காட்டிய நெப்போலியன்.. பழசை மறக்கலையே.. அதுவும் 500க்கும் மேற்பட்டோராமே
ஆரம்பத்தில் பல்வேறு அவமானங்களை பட்டு இப்போது நல்ல நிலைமையில் இருந்தாலும் இப்போதும் இவரை வில்லனாக பார்த்த ரசிகர்கள் பலர் இவரோடு செல்பி எடுப்பதற்கு பயப்படுவதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருக்கும் சில்வா, மங்கையர்க்கரசி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.
மகளுடைய பெயர் அம்ரிதா ஹர்ஷினி மகனுடைய பெயர் கிருஷ்ணனாம். சில்வாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்ததும் இவருடைய குழந்தைகள் இவ்வளவு பெரியவர்களாக இருக்கிறார்களா? என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இவருடைய மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாராம். அதுபோல சில்வாவின் மகள் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாராம்.
நடிகர் வினுசக்கரவர்த்தியின் மனைவி இந்த பிரபலம் தானா? இதுவரை யாரும் பார்க்காத குடும்ப புகைப்படம்