பெங்களூர்: கர்நாடகாவில் ‛நடமாடும் கடவுள்' என கூறப்பட்ட மறைந்த சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரின் சிலையை சேதப்படுத்தியதாக டெலிவரி பாயை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சொன்ன தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கர்நாடகாவில் நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்டவர் சித்தகங்கா சிவகுமார சுவாமி. லிங்காயத் பிரிவுக்கு சொந்தமான துமகூரு மாவட்டத்தில் உள்ள சித்தகங்கா மடாதிபதியாக இவர் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த மடத்தின் கீழ் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஏழை, எளிய குடும்பத்தில் இருந்து வரும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
மடாதிபதி சித்தகங்கா சிவகுமார சுவாமி கடந்த 2019ம் ஆண்டில் காலமானார். அப்போது அவருக்கு வயது 111. வயது 111 ஆனாலும் கூட அவர் யாருடைய தயவும் இன்றி மடத்தில் நடமாடினார். அதன்பிறகு வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் உபாதையால் காலமானார். சித்தகங்கா சிவகுமார சுவாமிக்கு பல இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் பனசங்கரி 3வது ஸ்டேஜில் உள்ள வீரபத்ர நகர் பஸ் ஸ்டாப் மேம்பாலம் அருகே சித்தகங்கா சிவகுமார சுவாமிக்கு சிலை உள்ளது.
இந்நிலையில் தான் நவம்பர் 30ம் தேதி அந்த சிலை சேதமடைந்து இருந்தது. யாரோ மர்மநபர் சிலையை உடைத்து தாரை பூசினார். இந்த சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் கண்விழித்தனர். மர்மநபரை விரட்டி சென்றபோது அவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து சிலையை நிறுவிய கன்னட அமைப்பை சேர்ந்த பரமேஸ் சார்பில் கடந்த 1ம் தேதி கிரிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதோடு சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கன்னட அமைப்பினர் போராட்டத்தை தொடங்கினர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர்.
முதலில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது ஒருவர் வந்து சிலையை சேதப்படுத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் உருவத்தை வைத்து போலீசார் விசாரித்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த சிவ கிருஷ்ணா (வயது 33) என்பதும், சிக்க கொல்லரஹட்டியில் வசிக்கும் அவர் டெலிவரி பாயாக வேலை செய்து வருவதும் தெரிவந்தது.
மேலும் சம்பவத்தன்றும் அவர் பார்சல் டெலிவரி செய்ய சென்றபோது சிலையை சேதப்படுத்தியதும் தெரியவந்தது. மேலும் சிலையை சேதப்படுத்தியதற்கான காரணம் பற்றி கேட்டபோது, ‛‛என் கனவில் இயேசு வந்தார்.விக்கிரக வழிபாட்டை போதிப்பவர்களை அிழக்க சொன்னார். அதனால் மடாதிபதி சிலைக்கு தார்பூசி சேதப்படுத்தினேன்'' என்று கூறினார். அதனை போலீசார் நம்பவில்லை. கைதான சிவகிருஷ்ணாவை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage