வரலாற்று உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. இனி ஆட்டமே வேற..!

post-img

இந்த வாரத்தின் துவக்கத்திலேயே உயர்வுடன் துவங்கி தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வரும் வேளையில் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் உள்ளது.

உலக நாடுகளில் ரெசிஷன் அச்சம் தலைவிரித்தாடும் நிலையில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் சாதகமாக உள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமுடன் முதலீடு செய்கின்றனர்.
இதன் மூலம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 137 வர்த்தக நாட்களுக்கு பின்பு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தில் 250 புள்ளிகளுக்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்த நிலையில் சென்செக்ஸ் அதன் வரலாற்று உச்ச அளவான 63588.31 புள்ளிகளை அடைந்துள்ளது.

ஆனால் அடுத்த சில நிமிடத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களும், சில வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் வரலாற்று உச்ச அளவீட்டை பணமாக்க முடிவு செய்து அதிகப்படியான பங்கு இருப்பை விற்பனை செய்ய துவங்கினர். இதனால் 11.18 மணியளவில் சென்செக்ஸ் 10 புள்ளிகள் சரிவுடன் 63,326 புள்ளிகளை அடைந்தது.

Stock Market Today: Top 10 things to know before the market opens

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 63,467 புள்ளிகளில் துவங்கி, 63588.31 புள்ளிகள் வரையில் உயர்வு வரலாற்று உச்ச அளவீட்டை தொட்டு உள்ளது. சென்செக்ஸ் குறியீடு 52 வார உயர்வு, வரலாற்று உச்சம் அளவான 63588.31 புள்ளிகளை எட்டியுள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் நேற்று 7 வருட உச்சத்தை தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள் இன்று மோசமாகவும், அதிகப்படியாகவும் 1.06 சதவீதம் சரிந்து 576.90 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ஐடிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி ஆகியவை 0.50 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது.  

மேலும் பவர் கிரிட் 2.33 சதவீத வளர்ச்சி உடன் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கியது. ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, எல் அண்ட் டி, விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை 0.50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

நிஃப்டி குறியீடு 4.75 புள்ளிகள் சரிந்து 18,811.95 புள்ளிகளை எட்டியுள்ளது, நிஃப்டி குறியீட்டில் பைனான்சியல் சர்வீசஸ், மீடியா, பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், ஆயில் அண்ட் கேஸ் குறியீடுகள் உயர்வுடன் உள்ளது.

சென்செக்ஸ் 21000 புள்ளிகளின் பெருக்கலில் இயங்கி வருகிறது,. 21000, 42000, 63000 புள்ளிகள், அடுத்த ஸ்டாப் 84000 புள்ளிகளில் தான். என்னை பொறுத்த வரையில் அடுத்த 2 வருடத்தில் சென்செக்ஸ் 84000 புள்ளிகளை தொட்டு விடும், 100000 புள்ளிகள் தான் இந்த தலைமுறை முதலீட்டாளர்களின் முக்கிய மைல்கல் ஆக இருக்கும் என விஜய் கேடியா தெரிவித்துள்ளார்.

Related Post