நியூயார்க்: சிரிய அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ள நிலையில் சிரியாவில் செயல்படும் ஐஎஸ் மற்றும் ஐஎஸ் ஆதரவு அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்த தொடங்கி உள்ளது. அமெரிக்க விமானப்படை B-52 Stratofortress Bombers, F-15E Strike Eagles மற்றும் A-10 Thunderbolt II விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய அரசு தலைவர்கள், போராளிகள் மற்றும் மத்திய சிரியாவில் உள்ள முகாம்களுக்கு எதிராக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
சிரியாவில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்பது தனியானது. இஸ்லாமிய அரசு மற்றும் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆகிய இருவரையும் எதிர்க்கும் குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கு அமெரிக்கா தற்போது தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
இவர்களுக்கு ஆதரவாக தற்போது சிரியா உள்ளே அமெரிக்கா B-52 Stratofortress Bombers, F-15E Strike Eagles மற்றும் A-10 Thunderbolt II விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சி கவிழ்ந்து உள்ள நிலையில் இஸ்ரேல் சிரியாவை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. சிரியாவின் முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
1974 இல் சிரியாவுடனான போர்நிறுத்த உடன்படிக்கையின் போது கோலன் மலைப்பகுதிகள் சிரியா வசம் வந்தது. சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த குன்று பகுதிகள் தற்போது இஸ்ரேல் வசம் வந்துள்ளது. சிரியா ஆட்சி கவிழ்ந்ததை பயன்படுத்தி இஸ்ரேல் அந்த பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
50 வருடமாக நிலவி வந்த.. சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே ஆட்சி கவிழ ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற போராளி குழுதான் காரணம்.
ஆட்சி மாற்றம்: அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. போராளி குழுக்களிடம் சரண் அடையும்படி வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 50 வருட ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சிரியாவில் இருந்து அதிபர் பஷர் அல் ஆசாத் விமானத்தில் ரகசியமாக ரஷ்யாவிற்கு தப்பி ஓடிவிட்டார்.
ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற குழுதான் அங்கே பிரதானமாக அரசுக்கு எதிராக போராடி வந்தது. சிரியாவில் அரசுக்கு எதிராக பல குழுக்கள் போராடி வந்தன . அந்த குழுக்களில் மிகவும் முக்கியமான மற்றும் வலிமையான குழு HTS ஆகும். இது லெவண்ட் விடுதலைக்கான அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக அல் கொய்தா போராடியது பலருக்கும் தெரியும். அந்த அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. இப்போது அந்த குழு சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக அங்கே கிளர்ச்சி செய்தது. இப்போது அங்கே ஆட்சியையே தூக்கி வீசி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage