சென்னை: இந்தியாவை சர்வதேச அளவில் சீண்டிய இரண்டு நாடுகளுக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய அரசியல் பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியாக இந்த நாடுகள் அரசியல் பிரச்சனைகள் சிக்கி உள்ளன.
முதல் நாடு: இந்தியாவை எதிர்த்து வந்த ஐஸ்டின் ட்ரூடோ கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளார். இந்தியாவுடன் ஐஸ்டின் ட்ரூடோ மோதிய நிலையில்.. தற்போது அவரின் பதவிக்கே சிக்கலாகி உள்ளது. கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி இருந்தார்.
அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.
இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார்.
இரண்டாவது நாடு: வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த போராட்டம் கலவரம் உள்நாட்டு போர் போல மாறிய நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்தார். வங்கதேச பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்தனர்.
இதையடுத்து அங்கே ஆட்சி கவிழ்ந்தது. அதோடு ஷேக் ஹசீனா டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டார். இதையடுத்து வங்கதேச நாட்டின் மூத்த ஆலோசகராக முகமது யூனுஸ் களமிறக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை முகமது யூனுஸ் வைத்து இருந்தார். வங்கதேச மக்கள் இப்போது ஹசீனா வெளியேற்றப்பட்டதைக் கொண்டாடுகிறார்கள், அதே நேரத்தில் கொண்டாட்டமே இங்கே கலவரத்திற்கு, மோதலுக்கு கூட வழிவகுத்து விடுகிறது. நாட்டில் விரைவில் ஸ்திரத்தன்மை திரும்பும். வங்கதேசம் 170 மில்லியன் மக்கள் வாழும் நாடு. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். முறையாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும்.
ஜனநாயகம்தான் ஸ்திரமின்மைக்கு மருந்து என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். வங்கதேசம் ஸ்திரமற்றதாக மாறினால், இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மேற்கு வங்க மாநிலம், மியான்மருடன் சேர்ந்து பாதிக்கப்படும். வங்கதேசம் பாதித்தால் எல்லையில் உள்ள இந்தியாவின் மாநிலங்களும் பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம், என்று இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசி இருந்தார்.
இந்தியாவை காலம் முழுக்க எதிர்த்த அதே யூனுஸ் இந்தியாவின் உதவிய நாடும் நிலைக்கு வந்துள்ளார். மியான்மர் - வங்கதேச எல்லைப் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் என்எஸ்ஏ அஜித் தோவல் ஆகியோரை தொடர்பு கொள்ள வங்கதேச நாட்டின் மூத்த ஆலோசகர் முகமது யூனுஸ் முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இத்தனை காலம் இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தி வந்தார் யூனுஸ்.. தற்போது அதே இந்தியாவிடம் இறங்கி வரும் நிலை வங்கதேசத்திற்கு ஏற்பட்டு உள்ளது.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதிலிருந்து வங்கதேசம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. வங்கதேச-மியான்மர் எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
மியான்மரின் கிளர்ச்சிக் குழுவான அரக்கன் ஆர்மி (ஏஏ) வங்கதேசத்தின் டெக்னாஃப் பகுதியின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் மற்றும் வங்கதேசத்தின் புகழ்பெற்ற செயின்ட் மார்டின் தீவு ஆகியவை இந்த இடத்திற்கு அருகே உள்ளது. இதனால் வங்கதேசம் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. மியான்மரின் கிளர்ச்சிக் குழுவான அரக்கன் ஆர்மி வங்கதேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
மியான்மரின் கிளர்ச்சிக் குழுவான அரக்கன் ஆர்மிக்கு பின் இந்தியா உள்ளது.. சீனா உள்ளது.. ஏன் அமெரிக்கா உள்ளது என்றும் கூட கூறப்படுகிறது. ஆனால் முகமது யூனுஸ் ஆட்சிக்கு எதிராக இது நடப்பதால்.. பெரும்பாலும் இந்தியாவின் மாஸ்டர்பிளானாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.