”ஒருத்தர் இல்ல.. 2 பேர் இருக்காங்க..” படத்தில் மறைந்துள்ள நபரை கண்டுபிடிக்க முடியுமா? 10 செகண்ட் டைம்

post-img
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் ஒருத்தர் இல்ல மொத்தம் 2 பேர் இருக்கிறார்கள். படத்தில் முதலில் பார்க்கும் போது விவசாயி ஒருவர் மட்டுமே நம் கண்களுக்கு பளிச் என்று தெரிவார். ஆனால் இதில் இன்னொருவர் மறைந்து இருக்கிறார். அவர் எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தினமும் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன், புதிர், சொடுக்கு போன்ற படங்களால் நெட்டிசன்களும் அதிகளவில் இதனை பார்க்கின்றனர். பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி பயனுள்ள வகையில் நேரத்தை கழிக்க இது போன்ற படங்கள் உதவுகின்றன. இதனால் அதில் மறைந்து இருக்கும் விடையை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தால், நம் உறவினர்களோ, நண்பர்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று சோதனை செய்வதற்காகவும் பகிரப்படுகின்றன. ஏனென்றால் இந்த படங்கள் மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும் சற்று ஆழ்ந்து பார்த்தால் வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும். பார்க்கும் கோணங்களை மாற்றி பார்க்கும் போது படத்தின் தன்மை வேறு விதமாக தோன்றும். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் விவசாயி ஒருவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். தூரத்தில் ஒரு வீடு இருக்கிறது. மற்றபடி எதுவும் படத்தில் தெரியவில்லை அப்படித்தானே.. ஆனால் கழுகுப்பார்வை கொண்டவர்கள் கண்களுக்கு மட்டுமே இங்கே இன்னொரு நபர் இருப்பது தெரியும். அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். படத்தில் மறைந்து இருக்கும் அந்த நபர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். என்ன போட்டிக்கு தயாரா? உங்களுக்கு 10 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ... 10. ஒகே டைம் ஓவர். படத்தில் இருக்கும் இன்னொருவரை கண்டுபிடித்து விட்டீர்களா?.. குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் நீங்க கில்லி தான். உங்க கண்பார்வை செம ஷார்ப்தான். ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுபவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை பாருங்கள். குறிப்பாக புற்களின் வடிவத்தில் ஏதேனும் முக அமைப்பு போன்று எதுவும் தெரிகிறதா என்று கூர்ந்து கவனியுங்கள்.. இப்போது ஒருசிலர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இன்னமும் ஒன்றும் தெரியவில்லையே என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள். அதாவது விவசாயியின் காலுக்கு அடியில் மட்டும் பாருங்கள். எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம். அட ஆமா.. நீங்கள் சொல்வது சரிதான். இப்போது 100க்கு 95 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இப்போதும் தெரியவில்லை என்பவர்களுக்காக நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Related Post