தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் இன்றோடு முடிய உள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான கேள்விகள் கடந்த சில நாட்களாக நிலவி வந்தன.
இதையடுத்து தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலராக, சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட உள்ளார். தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் இவருக்கு தலைமை செயலாளர் பதவி வழங்கப்படுகிறது. அவர் இன்று பதவி ஏற்க உள்ளார்.
தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் இவர் தற்போது தலைமை செயலாளர் பொறுப்பிற்கு தேர்வாகி உள்ளார். 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் அவருக்கு மாஸ்டர்மைண்டாக இருந்த 4 செயலாளர்களில் ஒருவராக இவர் இருந்தவர்.
அதன்பின் எடப்பாடி முதல்வரான போதும் இவரை அதேபோல் செயலாளர் பொறுப்பில் நியமிக்க நினைத்தார். ஆனால் அதற்குள் இவரை டெல்லி மத்திய அரசு பணிக்கு அழைத்தது. ஆனால் இவரை தமிழ்நாட்டிலேயே வைத்துக்கொள்ள எடப்பாடி தீவிரமாக முயன்று வந்தார். சட்டமன்ற கூட்டத்திற்கு பின்னர் அனுப்பி வைப்பதாக கூட கூறி சில நாட்கள் கூடுதலாக தமிழ்நாட்டில் வைத்து இருந்தார்.
ஆனால் வேறு வழியின்றி இவர் சிவ்தாஸ் கடைசியில் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இடையில் பல முறை எடப்பாடி முயன்றும் சிவ்தாஸ் மீனாவை மாநில பணிக்கு அழைக்க முடியவில்லை. இதையடுத்து ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சிவ்தாஸ் மீனாவை மாநில பணிக்கு அழைத்து வந்து.. தற்போது தலைமை செயலாளரும் ஆக்கி உள்ளார். இவரை தலைமை செயலாளராக்க வேண்டும் என்று கூறிதான் ஸ்டாலின் இங்கே அழைத்து இருந்தார்.
ஆனால் அவர் வரும் சமயத்தில் நேரமின்மை காரணமாக இறையன்புவை தலைமை செயலாளராக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதே இவருக்கு பின்னர் தலைமை செயலாளர் பதவி வழங்கப்படும் என்று ஸ்டாலின் வாக்கு கொடுத்து இருந்தாராம். அதன்படியே இப்போது சிவ்தாஸுக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. இவர் ஸ்டாலினின் குட் புக்கிலும் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி தேர்வு செய்யப்பட்டார்?:
இறையன்பு இடத்தை நிரப்ப முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் 5 பேர் கொண்ட லிஸ்டை தேர்வு செய்தார். அந்த லிஸ்டில் இருந்துதான் சிவதாஸ் மீனாவை முதல்வர் ஸ்டாலின் டிக் செய்துள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் 1986 ஆம் வருட பேஜ் அதிகாரியாக ஹன்ஸ்ராஜ் வர்மாவும், 1987 ஆம் வருட பேஜ் அதிகாரியான டி.வி.சோமநாதனும் இந்த போட்டியில் முதலில் முன்னணியில் இருந்தனர். இதில் ஹன்ஸ்ராஜ்வர்மா தற்போது டிக் நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். சோமநாதன், மத்திய அரசின் நிதித்துறையில் செலவினங்கள் பிரிவின் செயலாளராக இருக்கிறார். 1988 ஆம் வருட பேஜ் அதிகாரிகளில் இறையன்புவை தவிர்த்து விட்டால், விக்ரம்கபூர் இருக்கிறார். இவரும் மூத்த அதிகாரி. கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்.
அதுல்யமிஸ்ரா இதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவர் அரசின் டாப் தரப்பிற்கு மிகவும் நெருக்கம். அதோடு இவரும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். ஜித்தேந்திரநாத் ஸ்வைன் அதிகாரியும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். இவர்களில் ஸ்வைன் மத்திய அரசு பணியிலும், மற்ற இருவரும் மாநில அரசு பணியிலும் இருக்கின்றனர்.
இந்த தலைமை செயலாளர் லிஸ்டில் பிரதீப் யாதவ் ஐஏஎஸ்ஸும் இருந்தார். இவர் 1992 தமிழ்நாடு பேட்ச்சை சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர் அதிமுக ஆட்சியில் கல்வித்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே இவரின் செயல்பாடுகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இவர் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கூடுதல் தலைமை செயலாளராக பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், அவரும் இந்த ரேஸில் இருந்தார் . ஆனால் இவர்கள் எல்லாம் ரேஸில் இருந்தாலும் சிவதாஸ் மீனாவைத்தான் முதல்வர் ஸ்டாலின் கடைசியில் தேர்வு செய்துள்ளார்.