நடிகர் ரெடின் கிங்ஸ்லி பெரிய மூளைக்காரன்.. ரகசியத்தை சொன்ன பிரபலம்!

post-img

நகைச்சுவைக்கே உரித்தான ரைமிங்கில் ரைமிங் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி.

தமிழ் சினிமாவின் புதிய வரவு ரெடின் கிங்ஸ்லிக்கு டாக்டர் படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச்சாக்கியது.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி: இயக்குநர் நெல்சனின் நண்பரான ரெடின் கிங்ஸ்லி 2010ம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா நடித்த வேட்டை மன்னன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நின்றுபோனது. இதையடுத்து நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் நடித்திருந்தார். இதில் பெரிதாக பேசப்படும் வேடம் இல்லையென்றாலும் தனது தனித்துவமான நடிப்பால் யார்ரா இது? என கவனிக்க வைத்தார்.

காமெடி லூட்டி: அவரது தனித்துவமான நடிப்பு ஆர்ஜே பாலாஜிக்கு பிடித்துப்போனதால், தனது முதல் படமான எல்கேஜி படத்தில் நடிக்க வைத்தார். அதன் பின் நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் 'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' கதாபாத்திரத்தில் வரும் ரெடின், நாயகி குடும்பத்தை வைத்தும், யோகி பாபுவுடன் இணைந்தும் அடித்த காமெடி லூட்டிகளுக்கு தியேட்டரில் கரவொலியும் சிரிப்பொலியும் எழுகின்றன.

தனி ரசிகர்கள்: டாக்டர் படத்தை பார்ப்பவர்கள் அனைவருமே ரெடினை பாராட்டாமல் இருந்து இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிவிட்டார். ஜெயிலர் படத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி வந்த காட்சிகள் குறைவுதான் என்றாலும், அந்த காட்சியிலே ரசிகர்களை சிரிக்க வைத்துவிட்டார்.

பெரிய மூளைக்காரன்: இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ரெடின் கிங்ஸ்லியை அனைவரும் ஒரு காமெடி பீஸ் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர் பெரிய மூளைக்காரன். தமிழ் நாட்டில் நடக்கும் அனைத்து பொருட்காட்சியிலும் அரசுக்கு வரும் வருமானத்தை விட கூடுதலாக பல மடங்கு வருமானம் பெருபவர் ரெடின் கிங்ஸ்லி. பொருட்காட்சியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர் இவர் தான்.

பிஸ்னஸ் மேன்: அண்மையில் சென்னை தாம்பரத்தில் ஒரு பொருட்காட்சி நடந்தது அந்த பொருட்காட்சியை நடத்தியவர் ரெடின் கிங்ஸ்லி தான். இவரிடம் 300க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.மேலும், பல தொழிலதிபர்களிடம் இல்லாத விலை உயர்ந்த சொகுசு காரை இவர் வைத்து இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஓய்வில் இருக்கும் போதும் பிஸ்னஸ் பற்றித்தான் பேசிக்கொண்டு இருப்பார். கிட்டத்தட்ட 30வருடத்திற்கும் மேலாக இந்த தொழில் ரெடின் கிங்ஸ்லி இருந்து வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.


Related Post