வேற வழியே இல்ல... மாவீரனுக்காக சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்!

post-img

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் அடுத்த வாரம் 14ம் தேதி ரிலீஸாகிறது.

 

மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சிவகார்த்திகேயன். இதனால், மாவீரன் படத்துக்காக தனது சம்பளத்தை ரொம்பவே குறைத்துவிட்டாராம்.

மாவீரனுக்காக சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்:

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது மாவீரன் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். மண்டேலா படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை வென்ற மடோன் அஸ்வின், மாவீரனில் கமர்சியலாக ஹிட் கொடுக்க காத்திருக்கிறார்.

அடுத்த வாரம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் மாவீரன் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர், மிஷ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிவா நடிப்பில் கடந்தாண்டு வெளியான டான், பிரின்ஸ் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. டான் ஓரளவு தப்பினாலும், பிரின்ஸ் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

டான், பிரின்ஸ் படங்களின் தோல்வியால் பாக்ஸ் ஆபிஸில் கொஞ்சம் சரிவை சந்தித்தார் சிவகார்த்திகேயன். இதனால், மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மாவீரன் படத்தின் ரிசல்ட் தான் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் படப்பிடிப்பும் காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவீரன் படத்துக்காக தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்துள்ளாராம் சிவா. சினிமாவில் அறிமுகமான போது லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவா, தற்போது கோடிகளில் புரளுகிறார். அதன்படி லேட்டாஸ்ட்டாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு படத்துக்கு 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

ஆனால், மாவீரன் படத்திற்காக இதில் கொஞ்சம் இறங்கி வந்துள்ளார். அதன்படி, இந்தப் படத்திற்காக தனது சம்பளத்தில் 5 கோடி ரூபாய் குறைத்துள்ளாராம். இதனால் மொத்தமே 25 கோடி ரூபாய் தான் சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து பல இயக்குநர்கள் சிவகார்த்திகேயனிடம் கதைகள் சொல்ல ரெடியாக இருப்பதால், சம்பளத்தை குறைத்து ஒரு சூப்பர் ஹிட் கொடுக்கலாம் என பிளான் செய்துள்ளாராம். சிவாவின் இந்த முடிவு ஒர்க்அவுட் ஆகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post