நாட்டிலேயே ஏழை எம்எல்ஏ.. கடன் வாங்கி போட்டி.. சட்டப்பேரவை செல்ல 330 கி.மீ பைக் பயணம்

post-img

சென்னை: நாட்டிலேயே ஏழை எம்எல்ஏவாக மத்திய பிரதேசம் மாநிலம் சைலானா தொகுதியில் போட்டியிட்ட கமலேஷ் தோடியார் கருதப்படுகிறார். இவரை பற்றிய முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
அரசியல்வாதிகள் என்றாலே செல்வ செழிப்பாக இருப்பார்கள்.. ஊழல்வாதிகள் என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால், இதை மறுதலிக்கும் வகையில் சில நேர்மையான அரசியல்வாதிகளும் எளிமையான மக்கள் பிரதிநிதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் எளிய பின்னணியில் இருந்து வந்த ஒருவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்
மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 3 ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக வென்று ஆட்சி அமைத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள சைலானா தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சி சார்பில் போட்டியிட்டு கமலேஷ் தோடியார் வெற்றி பெற்றார். இவரது கட்சியில் வென்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ இவர் தான் ஆவார்.
டெலிவரி வேலை பார்த்துகொண்டு: சொந்தமாக வீடு எதுவும் இன்றி மண்குடிசை வீட்டில் வசித்து வரும் தோடியார், தனது தொகுதியில் இருந்து போபாலில் உள்ள சட்டப்பேரவைக்கு கூட பைக்கிலேயே சென்றுள்ளார். தன்னிடம் கார் எதுவும் இல்லாமல் 380 கி.மீட்டர் தொலைவுக்கு பைக்கிலேயே பயணம் செய்து இருக்கிறார். மிகவும் எளிய குடுமப்த்தில் பிறந்து வந்த கமலேஷ் தோடியார் சட்டம் பயின்று இருக்கிறார்.
டெல்லியில் உள்ள பல்கலைக் கழகத்தில் தோடியார் எல்.எல்.பி படித்துள்ளார். படிப்பதற்கு போதிய வசதி இல்லாததால் டிபன் டெலிவரி பாயாக வேலை பார்த்துக் கொண்டே தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்து இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிட்டுள்ளார். எனினும் தோல்வியை தழுவினார். பின்னர் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்து இருக்கிறார்.
கடன் வாங்கி தேர்தல் வேலை: அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிடவும் பிரசாரம் செய்யவும் பணம் இலலாததால் கிரவுட் ஃபண்டிங் எனப்படும் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுதல் மூலமாகவும் கடன் வாங்கியும் தான் தேர்தல் வேலைகளை பார்த்துள்ளார். தனது வெற்றியின் மூலம் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை பெற்று அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றதை கொண்டு வர முடியும் என தோடியார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உடன் பிறந்தவர்கள் 9 பேர்: நாட்டிலேயே மிகவும் ஏழை எம்.எல்.ஏவாக கருதப்படும் தோடியார் பற்றிய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தோடியார் குடும்பத்தை பற்றி சொல்வது என்றால் அவருடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். தோடியார்தான் கடைசி மகனாகும். தோடியாரின் தாயார் கூலி வேலை செய்து வருகிறார். எம்.எல்.ஏ வின் சகோதார்களும் தொழிலாளர்களாவே பணியாற்றி வருகின்றனர்.
11 முறை சிறை சென்றவர்: அவரது மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. தோடியார் மீது 15 வழக்குகளும் உள்ளன. 11 முறை சிறைச்சாலைக்கும் சென்று வந்துள்ளார். பழங்குடியின மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத்தான் அவர் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

 

Related Post