பொங்கலுக்கு கிடைக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்! குடும்ப தலைவிகளுக்கு வருது 2000! யார் யாருக்கு கிடைக்கும்?

post-img
சென்னை: புத்தாண்டில் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக 2000 ரூபாய் கிடைக்க இருக்கிறது. எப்படி கிடைக்கும்? யார் யாருக்கு கிடைக்கும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெருவெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற மகளிர் உரிமைத் தொகை திட்டம் தான். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி பதினாறு லட்சம் பயனாளிகள் தற்போது பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து புதிதாக மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களும் குவிந்து வருகிறது. இதை அடுத்து மாதம் மாதம் மகளிர் உரிமை தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாது, இறப்பு உள்ளிட்டவை காரணமாக சுமார் 1,27,000 பயணிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 14 லட்சம் ஆக உள்ளது. இந்த நிலையில் மாதாமாதம் மகளிருக்கு அவர்களது வங்கிக் கணக்கிலேயே ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளன. ஆனால் பிப்ரவரி மார்ச் மாதத்தில் தான் அந்தப் பணிகள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. இதை அடுத்து மகளிர் உரிமைத் தொகைக்காக தமிழக அரசின் இ சேவை மையங்களில் மீண்டும் விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. இதற்கு இடையே தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு இந்த ஆண்டு பணமாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் பணத்துடன் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பொருட்களாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் குறைபாடுகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதை அடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு 1000 ரூபாயை ரொக்கமாக வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனைத்து வகையான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உள்ளிட்டவையும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் மகளிருக்கு 2000 ரூபாய் கிடைக்க இருக்கிறது. பொங்கல் பண்டிகை காரணமாக ஐந்தாம் தேதிக்குள் மகளிர் உரிமைத்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவைக்கப்பட இருக்கிறது. அத்துடன் பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாயும் அவர்களுக்கு கிடைக்கும். இதற்காக முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டசபை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை முன்னதாகவே வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி முதல் வாரத்திலேயே தமிழகத்தைச் சேர்ந்த குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post