மும்பை: மகாராஷ்டிரா மகாயுதி கூட்டணி அமைச்சரவை விரிவாக்கத்தில் மூத்த தலைவர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான இந்த புதிய அமைச்சரவையில் ஏராளமான புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா தேர்தலில் 3 முறை வென்ற பாஜகவின் கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு இந்த முறை அமைச்சர் பதவி தரப்படாதது தமிழர்களிடையே ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.