சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஆன்லைன் டிக்கெட் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோவில் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சர்வர் கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும் அதுவரை ரயில் டிக்கெட்டுகளை கவுண்ட்டர்களில் பெற்றுக்கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கடும் போக்குரத்து நெரிசலுக்கு மெட்ரோ ரயில் தான் சிறந்த தீர்வாக உள்ளது. புறநகர் ரயில் வழித்தடங்கள் இல்லாத இடங்களுக்கு சென்னை மெட்ரோ ரயிலே பெரிதும் கை கொடுத்து வருகிறது.
பீக் நேரங்களில் பேருந்துகள், பைக்குகளில் சென்றால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கிக் கொள்ளும் நிலைமை ஏற்படும். இதனால், மெட்ரோ ரயில்கள் இருக்கும் வழித்தடங்களில் மெட்ரோவில் பயணிக்கவே பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். இதன்காரணமகா மெட்ரோ ரயில்களில் தற்போது புறநகர் ரயில்களுக்கு நிகராக கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக காலை மற்றும் மாலை பீக் நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் இன்று காலையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏன் திடீரென டிக்கெட் முன்பதிவு செய்யமுடியவில்லை என பயணிகள் பலரும் சிரமத்திற்குள்ளானார்கள். மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பினர்.
இதையடுத்து மெட்ரோ ரயிலில் ஆன்லைன் டிக்கெட் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. மேலும், மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் புக் செய்வதற்கான சர்வரில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. அதுவரை பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.