ரஷ்யாவில் வாழ பிடிக்கவில்லை.. விவாகரத்து கோரும் மனைவி.. சிரியா முன்னாள் அதிபருக்கு சோதனை மேல் சோதனை

post-img
வாஷிங்டன்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய ரஷ்யாவில் பஷார் அல் அசாத் அடைக்கலம் புகுந்துள்ளார். ரஷ்யாவில் வசிப்பதில் விருப்பம் இல்லாத்தால் பஷார் அல் அசாத்தின் மனைவி அவரிடம் இருந்து விவகாரத்து கோரியுள்ளாராம். ஏற்கனவே அதிகாரம் பறிபோனதால் நெருக்கடியில் இருக்கும் சிரியா அதிபருக்கு, சொந்த வாழ்க்கையிலும் புது தலைவலி ஏற்பட்டுள்ளது சிரியாவில் இருந்து வெளியேறிய அதிபர் பஷால் அல் அசாத் தனது மனைவி அஸ்மா - அல் அசாத்துடன் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். பல ஆயிரம் கோடி பணத்துடன் அல் அசாத், மஸ்கோவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, மாஸ்கோவில் வாழ்வது அல் அசாத்தின் மனைவிக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அவரிடம் இருந்து விவகாரத்து கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனுக்கு செல்ல அஸ்மா முடிவு செய்து இருப்பதாகவும் துருக்கி மற்றும் அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டிஷ் - சிரியா வம்சாவளியை சேர்ந்த அஸ்மா, லண்டனில் தான் பிறந்து வளர்ந்துள்ளார். அஸ்மாவின் பெற்றோர் சிரியாவை சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் லண்டனுக்கு குடிபெயர்ந்ததால், அஸ்மா அங்கேதான் படித்துள்ளார். தனது 25 வயதில் அதவது 2000 ஆம் ஆண்டில்தான் சிரியாவுக்கு அஸ்ம வந்தாராம். அதே ஆண்டில் பஷார் அல் அசாத்தையும் திருமணம் செய்து கொண்டார். 49-வயதான அஸ்மா, ரஷ்ய நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் மாஸ்கோவை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது மனுவை ரஷ்ய அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்களாம். சிரியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் கொடி கட்டி பறந்த அசாத்தின் குடும்ப ஆட்சி, கிளர்ச்சியாளர்களால் வீழ்த்தப்பட்டது. இதனால், நாட்டை விட்டு தப்பி ஒடி ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ள அசாத்திற்கு, அவரது மனைவி எடுத்த முடிவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முன்னதாக இந்த மாத துவக்கத்தில் சிரியாவில் ஆட்சி அதிகாரத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால், தனது குடும்பத்தின்ருடன் யாருக்கும் தெரியாமல் பஷார் அல் அசாத், நாட்டை விட்டு வெளியேறினார். அவர் சென்ற விமானம் திடீரென ரேடார் கட்டுப்பாட்ட்டை இழந்ததால் விபத்தில் சிக்கியதாக கூட தகவல் வெளியானது. சில நாட்கள், பஷார் அல் அசாத்திற்கு என்ன ஆனது? எங்கு இருக்கிறார் என்ற விவரம் எதுவும் தெரியாமல் இருந்த நிலையில், அவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்த விவரம் வெளியானது. பஷார் அல் அசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுத்து இருப்பதாக ரஷ்யவும் உறுதி செய்தது. சிரியாவில் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பஷார் அல் அசாத்தின் குடும்பமே ஆட்சி செய்தது. பஷர் அல் அசாத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், கடந்த மாதம் அவர்களின் தாக்குதல் தீவிரம் அடைந்தது. உள்நாட்டு போர் உச்சம் பெற்ற நிலையில் நிலைமை கையை மீறி போனதால் தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் அசாத் நாட்டை விட்டு வெளியேறினார். அசாத்திற்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்து இருந்தாலும் கூட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மாஸ்கோவை விட்டு வெளியேறக் கூடாது. எந்த வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்பது போன்ற பல நிபந்தனைகளையும் ரஷ்யா விதித்துள்ளதாம். அதுமட்டும் இன்றி பஷார் அல் அசாத்திற்குசொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை ரஷ்ய அதிகாரிகள் முடக்கியுள்ளனர். 270 கிலோ தங்கம், 2 பில்லியன் டாலர், மாஸ்கோவில் உள்ள 18 அடுக்குமாடி குடியிருப்புகள் என பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவாம். பஷார் அல் அசாத்தின் சகோதரர் மஹீர் அல் அசாத்திற்கு ரஷ்யா அடைக்கலம் கொடுக்கவில்லையாம். அவரையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டுக்காவலில் வைத்து இருக்கும் ரஷ்யா, மஹீர் அல் அசாத்தின் கோரிக்கை பற்றி பரீசிலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Related Post