டெல்லி: நமது நாட்டில் விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே செக்-இன் லக்கேஜ் தொடர்பாக சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அவை என்ன மாற்றங்கள்.. இனிமேல் பயணிகள் எந்தளவுக்கு லக்கேஜ் எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் இப்போது விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே விமானப் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதாவது கையில் நாம் உடன் எடுத்துச் செல்லும் லக்கேஜ் தொடர்பாக புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இனிமேல், பயணிகள் ஒரே ஒரு பேக்கை மட்டுமே விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணங்களில் இதே ரூல்ஸ் தான் பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை நிர்வகிக்கவும் விமானிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமான நிலையச் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பாதுகாப்புச் சோதனைகளில் தேவையற்ற கூட்ட நெரிசலைக் குறைக்கவும் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கு முன்பு வரை கேபின் பேக்கேஜாக இரண்டு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இந்த புதிய விதிமுறைகளின்படி இனி பயணிகள் ஒரே ஒரு லக்கேஜ்ஜை மட்டுமே கேபினில் எடுத்துச் செல்ல முடியும். மற்ற அனைத்தையும் செக்-இன் லக்கேஜாக அனுப்பிவிட வேண்டும்.
இந்த புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப பிரபல விமான நிறுவனங்களும் தங்கள் ரூல்ஸை மாற்றியுள்ளன. முதலில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ தங்கள் பேக்கேஜ் கொள்கைகளை மாற்றியுள்ளன. ஏர் இந்தியா தனது பிரீமியம் எகானமி மற்றும் எகானமி வகுப்பு பயணிகள் 7 கிலோ வரை எடையுள்ள ஒரு பேக்கை எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது. பிசினஸ் கிளாஸ் மற்றும் முதல் வகுப்பு பயணிகள் 10 கிலோ வரையிலான பேக்கை எடுத்துச் செல்லலாம். அதேநேரம் ஹேண்ட் லக்கேஜ் பேக்கின் அளவு 40 செமீ (நீளம்) x 20 செமீ (அகலம்) x 55 செமீ (உயரம்) மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மற்றொரு முன்னணி நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸும் தனது பாலிசியை அப்டேட் செய்துள்ளது. 7 கிலோ எடை மற்றும் 115 செமீக்கு மிகாமல் ஒரு பேக்கை எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பயணிகள் பர்ஸ், சிறிய லேப்டாப் பேக் உள்ளிட்ட ஒரே ஒரு சின்ன பொருளை எடுத்துச் செல்லலாம். அதன் எடை வரம்பு 3 கிலோ ஆகும். அதாவது இண்டிகோ பயணிகள் ஒரு கேபின் பை மற்றும் ஒரு தனிப்பட்ட பொருளை எடுத்துச் செல்லலாம்.
நமது நாட்டில் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ஒரே நபரே பல கேபின் லக்கேஜ்களை எடுத்து வருவதால் பாதுகாப்பு சோதனைகளின் போது தாமதம் ஏற்படுகிறது. இதனால் கேபின் லக்கேஜ்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், தாமதங்களைக் குறைப்பது, போர்டிங் செயல்முறையை விரைவுபடுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.