கண்ணெல்லாம் கருவளையம்.. கண்களை சுற்றி கருப்பா இருக்கா..வாழைப்பழம் இருக்குதுல்ல..

post-img

சென்னை: சிலருக்கு கருவளையம் என்பது தீரா பிரச்சனையாக அமைந்துவிடுகிறது.. உணவு முறை மற்றும் நடைமுறை பழக்கத்தை சற்று மாற்றி கொண்டாலே தீர்வு கிடைத்துவிடும்.
கருவளையம் தோன்ற பல காரணங்கள் உள்ளன.. ஒரு சில நோய்கள் இருந்தாலும் கருவளையம் வரலாம். மன அழுத்தம் இருந்தாலும் கருவளையம் வரலாம்.. போதுமான அளவுக்கு தூக்கம் இல்லாமவிட்டாலும் கருவளையம் வரலாம்..
கருவளையம்: அதிகமான கம்ப்யூட்டர், செல்போன், போன்வற்றில் ஈடுபட்டு இருந்தாலும் கருவளையம் வரலாம்.. போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்காவிட்டாலும் கருவளையம் வரலாம்..
இதில் தண்ணீர் மிக மிக முக்கியமானது.. தண்ணீர் என்பது கண்களுக்கு மட்டுமல்ல, சரியான ரத்த ஓட்டத்திற்கும் இந்த தண்ணீர்தான் முக்கியம்.. ஆனால், தண்ணீர் இல்லாவிட்டால், கண்களுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து, கருவளையம் வர காரணமாகிவிடும். அதனால், தண்ணீருக்கும் கண்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.

பச்சை வாழைப்பழம்: கருவளையத்தை எளிய முறையில் வீட்டிலேயே நாம் போக்கி கொள்ளலாம்.. இதற்கு பச்சை வாழைப்பழத்தின் தோலை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு, அந்த தோலில் சிறிதளவு விளக்கெண்ணையை தடவி, கண்ணை சுற்றி வைத்து 20 நிமிடங்கள் தேய்த்து கழுவிவிட வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்தால், கருவளையம் மறைந்துவிடும். அதேபோல, குளிர்ச்சி நிறைந்த விளக்கெண்ணெய்யையும் கண்கள், புருவங்களில் தடவி வரலாம்.
உருளைக்கிழங்கை சாறு எடுத்து, பஞ்சினால் நனைத்து கண்களை சுற்றி தடவி வந்தாலும், கருவளையம் நீங்கும்.. எலுமிச்சை சாறு தக்காளி சாறு இரண்டையும் கலந்தும் கண்களை சுற்றி தடவி வரலாம். பாதாம் + பால் இரண்டையும் கலந்து பேக் போல போடலாம்..
மசாஜ்: கண்களை மூடியபடி வட்டவடிவில் மசாஜ் செய்வது சோர்வு கொண்ட கண்களுக்கு புத்துணர்ச்சி யாக இருக்கும். அதே நேரம் ஊட்டசத்துகுறைபாடில்லாமல் பார்த்துகொள்வதும் உடலில் நீர் வறட்சி இல்லாமல் பார்த்துகொள்வதும் கூட உங்கள் கருமை நிற கருவளையத்தை விரைவாக போக்கி விடும்.
மென்மையான சருமத்தை கொண்டவர்கள், சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள், அந்த சருமத்திற்கு அதிகமாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக இருப்பதால், அவை சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.
வெண்ணெய்: நான்கைந்து ஸ்பூன் அளவுள்ள க்ரீன் டீ எடுத்து கொண்டு, அரை டம்ளர் நீரில் போட்டு ஊறவைத்து, திக்கான டிக்காஷன் எடுத்து கொள்ள வேண்டும். இதில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, காட்டன் துணியில் நனைத்து, கண்களின் மீது தடவி வரலாம். வெண்ணெய் + மஞ்சள் தூள் + ஆரஞ்சு சாறு கலந்து குழைத்து கண்களை சுற்றி மசாஜ் போல தேய்த்து விடலாம்..
குளிர்ச்சி நிறைந்த எலுமிச்சை இலையை அரைத்து சாறு எடுத்து, அதனுடன், விளக்கெண்ணெய், தேன் கலந்து கண்களை சுற்றி மசாஜ் செய்யலாம்.. அவகேடோ பழம் + வாழைப்பழம் மசித்து பேஸ்ட் போல கண்களை சுற்றி பேக் போல போடலாம்.. வைட்டமின் E கேப்சூல் எண்ணெய் + பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களைச் சுற்றி மசாஜ் போல செய்து வரலாம். புதினா சாறு, கேரட் சாறு இரண்டையும் கலந்து கண்களைச் சுற்றி, தடவி வரலாம்.

காய்ச்சாத பால்: இரவில் தூங்க செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை 2 சொட்டு கருவளையம் மீது அப்ளை செய்து வந்தாலும் கருவளையம் நீங்கும்.. காய்ச்சாத பாலில், சுத்தமான பஞ்சை நனைத்து கண்களின் மீது ஒத்தடம் தந்தாலும் கருவளையம் நீங்கிவிடும்.
தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, புதினா சேர்த்து குடித்து வரலாம்.. வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தாலும் கருவளையம் நீங்கும்.. ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து கண்களில் வைத்து வந்தாலும் நாளடைவில் கருவளையம் நீங்கும்.
கம்ப்யூட்டர்: இதெல்லாம் பலன் தரும் என்றாலும், கருவளையம் ஏற்படாமலேயே தடுக்க நன்றாக தூங்க வேண்டும்.. குறைந்தது 7 மணி நேர தூக்கம் அவசியம் என்கிறார்கள்.. கண்களுக்கு நிறைய ஓய்வு தேவை.. கம்ப்யூட்டரில் அதிக வேலை என்றாலும், அடிக்கடி ஓய்வு தர வேண்டுமாம்.. கண்ணை சுற்றி சிறுசிறு மசாஜ் போல செய்து தரலாம்.. அதைவிட முக்கியமாக, ஊட்டச்சத்து நிறைந்த உணவு எடுத்து கொள்ள வேண்டும்.. அதைவிட முக்கியமாக, இருட்டில் செல்போனை பயன்படுத்தவே கூடாதாம்.

 

Related Post