காரில் திருப்பதி போறீங்களா.. ஸ்பிரே உடன் காத்திருக்கும் போலீஸ்..

post-img

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். அதுவும் விடுமுறை தினங்களில் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. திருப்பதிக்கு மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதேவேளையில் விபத்துக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. 

திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்காக வரும் பயணிகள் விபத்தில் சிக்கி படுகாயங்கள் அடைவதும், சில விபத்துக்களில் உயிரிழப்புகளும் கூட ஏற்படுகின்றன. மலைப்பாதைகளில் வாகனம் ஒட்டுவது என்பது எப்போதுமே சற்று கடினமானது. சாதாரண சாலைகளில் செல்வதை விட மிக மிக கூடுதல் விழிப்புடன் வாகனம் ஓட்ட வேண்டும்.

முதல்வர் வெளிநாடு சென்றதும் வருமான வரி சோதனை ஏன்? - மணி, பத்திரிகையாளர் அலட்சியமாக வாகனம் ஓட்டுவதால்: ஏனெனில் ஆபத்தான வளைவுகள் மற்றும் எதிரே வரும் வாகனங்கள் என மலைப்பாதையின் மொத்த பயணமும் மிகவும் கவனமாக இயக்க வேண்டியிருக்கும். அதிவேகத்தில் செல்லும் ;போது வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இதனால், திருப்பதி மலைப்பாதையில் விபத்துக்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை திருப்பதி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திருப்பதி கூடுதல் எஸ்பி முனி ராமய்யா தலைமையில் திருமலை போக்குவரத்து போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து மலைப்பாதையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கூடுதல் எஸ்.பி முரளி ராமய்யா கூறியதாவது:- மலைப்பாதைகளில் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு செல்பி எடுக்கிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுக்க தடை விதிக்கப்படுகிறது. கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திருப்பதி மலைப்பாதையில், போதிய விழிப்புணர்வு இன்றி அலட்சியமாக வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.


முகத்தில் ஸ்பிரே அடிக்கும் போலீசார்: வாகனத்திற்கு உண்டான இருக்கை எண்ணிக்கை மிகாமல் பயணிகள் இருக்க வேண்டும். வாகனங்களின் இருக்கைகள் மேல் பயணிகள் இருக்கக்கூடாது. மலைப்பாதையில் விபத்துக்கள் நடைபெறும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் எல்லாம் வேகத்தடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதையில் வேகமாக ஓட்டி வரக்கூடிய வாகனங்கள் திருமலைக்கு மீண்டும் வராத வகையில் தடை விதிக்கப்படும். அத்துடன் அந்த வாகனத்திற்கு அபராதமும் வசூலிக்கப்படும். மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் முன்னாள் செல்லும் வாகனங்களை முந்தி செல்ல நினைக்க வேண்டாம்" என அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் திருப்பதிக்கு பலரும் நீண்ட தொலைவில் இருந்தும் கார்கள், வேன்கள் உள்ளிட்டவற்றில் வருகை தருகிறார்கள். இதனால், டிரைவர்கள் வெகு தொலைவு வாகனத்தை இயக்கி விட்டு தூக்க களைப்புடன் வாகனத்தை இயக்குவதாலும் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையில், இதுபோன்ற விபத்துக்களை தடுக்க புதிய முயற்சி ஒன்றை திருமலை போலீசார் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தும் போலீசார், ஓட்டுநர்களின் முகத்தில் தண்ணீரை ஸ்பிரே செய்கின்றனர். அதன் மூலம், ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்தில் இருந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்ற அடிப்படையில் போலீசார் இந்த நூதன முயற்சியை கையில் எடுத்துள்ளனர். திருப்பதி போலீசாரின் இந்த நூதன முயற்சி வாகன ஓட்டிகள் பலருக்கு வினோதமாக தெரிந்தாலும் விபத்தை எப்படியாவது கட்டுப்படுத்தினால் சரிதான் என்றும் பக்தர்கள் சொல்லாமலும் இல்லை.


Related Post