நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் மனைவி இந்த பிரபலம் தானா..? மகன்கள்..

post-img

சென்னை: வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும், வீடியோகிராபராகவும் பணியாற்றிய சுந்தராஜனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


பல முன்னணி நடிகர்களுடைய திரைப்படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த சுந்தர்ராஜன் தற்போது சின்னத்திரையிலும் களம் இறங்கி இருக்கிறார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனின் அப்பாவாக நடித்தவரும் சுந்தர்ராஜனின் குடும்ப விவரங்களை விரிவாக பார்க்கலாம்.


பல நடிகைகள், நடிகர்கள் வெள்ளித்திரையில் கொடி கட்டி பறந்து பிறகு சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பல முகம் கொண்ட சுந்தர்ராஜன் விஜய் டிவியில சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்து வருகிறார்.


நடிகர் ஆனந்தராஜின் மகன் மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா? ஆதரவற்ற குழந்தைகளுக்காக செய்த செயல்
நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் "அன்று சிந்திய ரத்தம்" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், ராஜாதி ராஜா, அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, எங்கிட்ட மோதாதே, திருமதி பழனிச்சாமி, சூரிய வம்சம் என பல வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்.


அதிலும் சூரியவம்சம் திரைப்படத்தில் சதாசிவம் கேரக்டரில் இவர் நடிப்பு எதார்த்தமாக இருக்கும். இப்போது உள்ள சூழ்நிலையில் கூட புதியதாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்கள் சதாசிவம் போன்ற ஒரு நபரை சம்பாதித்து வைத்திருந்தால் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று கூறலாம். சூரியவம்சம் திரைப்படத்தில் சின்ராசுவும் நந்தினியும் வெற்றி பெறுவதற்கு வீடு கொடுத்து ஆரம்பத்தில் பணமும் கொடுத்த சதாசிவம் தான் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது பலருக்கும் தெரிந்தது.



அதே நேரத்தில் ஆர். சுந்தர்ராஜன் கடைசியாக 2013 ஆம் ஆண்டில் சித்திரையில் நிலாச்சோறு என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதேபோல டப்பிங் கலைஞரான துர்கா என்பவரை சுந்தரராஜன் திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு கார்த்திக், தீபன், அசோக் ஆகிய மூன்று மகன்கள் பிறந்து இருக்கின்றனர். அதில் 2004 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் கார்த்திக் இறந்துவிட்டார்.


அதுபோல 2021 ஆம் ஆண்டில் தீபக் அண்ணாவில் சேதுபதியுடன் இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார். அது மட்டுமல்லாமல் ஆர். சுந்தர்ராஜனின் இன்னொரு மகன் அசோக் அவர் இயக்கிய சித்திரையில் நிலாச்சோறு என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார். அதோடு 1982 ஆம் ஆண்டு முதல் சுந்தரராஜனின் மனைவி துர்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் டப்பிங் கலைஞராக பிரபலமடைந்தவர் தான். அதிலும் தூரல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு உட்பட ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்படங்களில் இவருடைய டப்பிங் கலைஞராக இருந்திருக்கிறார்.


அதே நேரத்தில் தற்போது சீரியல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆர்.சுந்தர்ராஜனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த அதிகமான ரசிகர்கள் ஆர் சுந்தர்ராஜன் தன்னுடைய குடும்பத்தை அதிகமாக வெளியே காட்டாமல் வைத்திருக்கிறாரே? அதுவும் இவருடைய மனைவி இத்தனை திரைப்படங்களில் டப்பிங் கொடுத்திருக்கிறாரா? என்று அதிசயப்பட்டு வருகிறார்கள்.

 

Related Post