பாரிஸ்: 71 வயது தாத்தாவுக்கு என்ன தண்டனை கிடைக்க போகிறதோ? என்று ஒட்டுமொத்த பிரான்ஸ் நாடும் எதிர்பார்த்தது. அனைவரும் விரும்பியதுபோல கடுமையான தண்டனை கிடைத்தாலும், இது பாதிக்கப்பட்டவருக்கு எந்தவகையில் நீதியை பெற்று தரும்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்ன நடந்தது?
பிரான்சை சேர்ந்தவர் 71 வயது டொமினிகியூ.. இவரது மனைவி 72 வயது கிசெல்.. தன்னுடைய மனைவிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து தந்து தினமும் குடிக்க வைப்பாராம் டொமினிகியூ.. தூக்க மாத்திரை கலந்திருப்பது தெரியாமல், கிசெல்லும் அதை குடித்துவிடுவாராம். பிறகு போதை மாத்திரைகளை அந்த பாலிலேயே கிசெல்லுக்கு தருவாராம் டொமினிகியூ.
இறுதியில் கிசெல் மயக்கமாகி விழுந்ததும், அவரை பலாத்காரம் செய்வதற்கு ஆட்களை ரூமுக்குள் அறைக்குள் அனுப்பி வைப்பாராம் டொமினிகியூ. இதற்காகவே ஆட்களை ஆன்லைனில் தேர்ந்தெடுத்து, மனைவியை கற்பழிக்க வைத்துள்ளார்.
தொடர்ந்து கடந்த 10 வருட காலமாக, டொமினிகியூ இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வயதானவர் என்பதாலும், கிசெல்லுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும் இவர்மீது யாருக்குமே சந்தேகம் வரவில்லை.. ஒருநாள் டொமினிகியூ ஷாப்பிங் சென்டர் போனபோது, அங்குவந்த இளம்பெண்ணை ரகசியமாக கேமராவில் வீடியோ எடுத்துள்ளார். அப்போதுதான் போலீசாரிடம் சிக்கியிருக்கிறார்.
இவரது போனை வாங்கி பார்த்த போலீசாருக்கு தலையே சுற்றிவிட்டது. ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. எனவே அவரது லேப்டாப், கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்துள்ளனர். அதில், தன்னுடைய மனைவியை பலபேர் பலாத்காரம் செய்யும் வீடியோ, போட்டோக்களை, லேப்டாப்பில் சேமித்து வைத்திருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.
டொமினிகியூ - கிசெல் தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 10 ஆண்டுகளாகவே மனைவியை பலாத்காரம் செய்வதற்காக, 26 வயது முதல் 74 வயதுள்ளவர்களை ஆன்லைனில் நபர்களை தேர்ந்தெடுத்து வந்துள்ளார். மனைவி ஆழ்ந்த மயக்க நிலையில் இருக்கும்போது, பலாத்காரம் செய்வதற்காக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு போன் செய்து வரவழைப்பாராம் டொமினிகியூ. இதுபோல, கிசெல்லை இதுவரை 72 பேர் 92 முறை பலாத்காரம் செய்திருப்பதாகவும், இதில் 51 நபர்கள் மட்டுமே அடையாளம் மட்டுமே காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த வழக்கு நீதிமன்றம் வரை வந்தது.. ஒவ்வொருமுறையும் வழக்கின் விசாரணை நடந்தபோதெல்லாம் டொமினிகியூவின் 2 மகள்களும் கோர்ட்டுக்கு தந்தையுடன் வந்து சென்றிருந்தனர்.
கோர்ட்டில் கிசெல்லின் வழக்கறிஞர் வாதாடும்போது, "கிசெல்லுக்கு உடம்பு சரியில்லை.. பலாத்காரம் செய்யும்போது தான் போதையில் இருப்பதை கூட அவர் உணரவில்லை... அந்தளவிற்கு அதிகமான போதை மருந்து கலக்கப்பட்ட உணவு தந்திருக்கிறார்கள்.. அதீத போதையால் என்ன நடந்தது என்றே கடந்த 10 வருடங்களாக அவரால் உணர முடியவில்லை. அளவுக்கு அதிகமான போதை மருந்துகளால் உடல்நிலையும் மோசமாகிவிட்டது.. ஞாபக மறதியும் வந்துவிட்டது.. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பயனில்லை" என்றார்.
இதையடுத்து, கம்ப்யூட்டரில் இருந்த வீடியோக்களின் அடிப்படையில், சிசெல்லை சீரழித்தவர்களில் 51 ஆண்கள் தற்போது கைது செய்யப்பட்டார்கள்.. இந்த வழக்கில் டிசம்பர் 19ம் தேதி தீர்ப்பளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், என்ன மாதிரியான தண்டனை டொமினிக்கு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
நேற்றைய தினம் டொமினிகியூவுக்கு தீர்ப்பு தரப்பட்டுள்ளது. அதில், 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.. கிசெல்லை சீரழித்த 51 நபர்களுக்கும், 5 முதல் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு பரபரப்பை தந்துள்ளது. குற்றவாளிகளுக்கு இப்படியொரு தண்டனை கிடைத்தாலும், இந்த மோசமான செயலை செய்தவர்களை சிறைக்கு அனுப்பியதால், இத்தனை ஆண்டுகளாக தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமலே கொடுமைகளை அனுபவித்து வந்த சிசெலுக்கு உண்மையாகவே நீதி கிடைத்துள்ளது என கருதமுடியுமா? என்று பலரும் பரிதாபத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.