அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை செய்தனர். 17 மணி நேரங்களுக்கு பின் அவர் வீட்டில் சோதனைகள் முடிந்தது.
செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
சோதனை முடிந்த அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். அவர் காலையில் வாக்கிங் சென்ற போது தொடங்கிய ரெய்டு இரவு வரை நீடித்தது.
அவர் வீட்டில் இருந்து சில பைகளையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காகவும், முறையாக கைது செய்யவும் அவரை அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வீடியோ: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நொடியில் என்ன நடந்தது என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு ஆ என்று கத்தி இருக்கிறார். கண்ணீர் விட்டு கதறி இருக்கிறார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.