80- பிறந்த நாள் கொண்டாடும் இசைஞானி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து .,

post-img

ஞானதேசிகன் என்னும் இயற்பெயரை கொண்ட இளையராஜா இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன் முகம் கொண்டவர். உண்மையிலேயே இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி தான். அதே நாள் தான் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அவர் மீது இருந்த மதிப்பும் மரியாதையால் தனது பிறந்தநாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடி வருகிறார் இளையராஜா.

Ilayaraja 80: Chief Minister Stalin wishes the Isaignani Ilaiyaraajas birthday

அதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார். கலைஞர் ஐயா தமிழுக்கு ஏராளமான சேவைகளை செய்துள்ளார். அந்த அளவுக்கு நான் ஒன்றும் செய்து விடவில்லை. அதனால் கலைஞரை மட்டுமே தமிழக மக்கள் ஜூன் 3ஆம் தேதி வாழ்த்த வேண்டும். அதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்ததாக பலமுறை தெரிவித்துள்ளார்.

பண்ணைபுரம் என்னும் கிராமப்புறத்தை பிறப்பிடமாக கொண்ட இளையராஜா 14 வயதில், அவர் தனது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக் குழுவில் சேர்ந்தார். தமிழ் திரைப்பட உலகில் கடந்த 40 ஆண்டுகாலமாக இசை ராஜாங்கம் நடத்தி வரும் இளையராஜாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

Ilayaraja 80: Chief Minister Stalin wishes the Isaignani Ilaiyaraajas birthday

இளையராஜாவிற்கு ட்விட்டர் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி 70வது பிறந்தநாளை கொண்டாடுடினார். அப்போது இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தன்னுடைய 70-வது பிறந்தநாள் கொண்டாடும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு நிறை செல்வங்களோடு ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் இளையராஜாவை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

Related Post