செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்

post-img

நெஞ்சுவலியால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான மெமோவை வாங்க மறுத்தார் - அமலாக்கத்துறை வாதம்

ரிமாண்ட்டை நீக்க கோரிக்கை வைக்க முடியாது, ஜாமீன்தான் கேட்க முடியும் - அமலாக்கத்துறை வாதம்

கைதுக்கு முன் நோட்டிஸ் வழங்கப்படவில்லை. கைதுக்கான காரணத்தை செந்தில் பாலாஜியிடமே தெரிவிக்கவில்லை - மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வாதம்

மனைவியிடம், உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை - மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வாதம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக நள்ளிரவில் கைது செய்துள்ளனர்- மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வாதம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரிமாண்டை நிராகரிக்க வேண்டும்; இன்று அதிகாலை, மனித உரிமை மீறி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் - மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வாதம்

செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன - திமுக எம்பி வில்சன்

செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் டார்ச்சர் செய்து உள்ளனர் - திமுக எம்பி வில்சன்

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது ஏன் என்று வழக்கறிஞர் வில்சன் கேள்வி

15 நாட்கள் நீதிமன்ற காவலை தொடர்ந்து உடனடியாக ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல்

செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி

செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதம். செந்தில் பாலாஜி சட்ட விதிகளுக்கு எதிராக கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் இளங்கோவன் வாதம்

அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கும் அறைக்குச் செல்லும் வழக்கறிஞர்கள் குழு. அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் வருகை

அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்தார் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிமாண்ட் செய்யப்பட வாய்ப்பு

செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க மருத்துவமனைக்கு செல்ல உள்ளார் நீதிபதி அல்லி

சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மாலை 5 மணிக்கு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு செல்கிறார்

இன்றே விசாரணை மேற்கொள்ள ஐகோர்ட் அனுமதி அளித்த நிலையில் நடவடிக்கை

செந்தில் பாலாஜி தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சக்திவேல் விலகினார்

காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளார் செந்தில் பாலாஜி

இதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதால் அலைகழிக்கப்படும் மற்ற நோயாளிகள்

காலை 8 மணிக்கு வந்தவர்களை மணிக்கணக்கில் காக்க வைப்பதாக புகார்

பேட்டரி கார்களும் சரியாக இயங்காததால் நோயாளிகளை அலைகழிப்பதாக நோயாளிகள் குற்றச்சாட்டு

Related Post