மதுரை ரயில் தீவிபத்தில் சிக்கிய 11 வயது சிறுவன்! ?

post-img

மதுரை: மதுரை ரயில் தீவிபத்தில் சிக்கி 9 பேர் பலியான நிலையில் அங்கு தண்டவாளத்தில் நின்றபடியே சிறுவன் ஒருவன் ஸ்லோகம் சொன்னது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 65 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்க சென்றனர். அவர்களுடன் இரு சமையல் கலைஞர்களை அழைத்துக் கொண்டு 3 பெட்டிகளில் முழுக்க பயணித்தனர்.


இந்த பெட்டி லக்னோ- ராமேஸ்வரம் செல்லும் ரயில்களில் கடைசியாக இணைக்கப்பட்டு ஆங்காங்கே செல்லும். அந்த வகையில் இவர் இன்று அதிகாலை 3.48 மணிக்கு புனலூர் வந்தனர். அங்கு ரயில் நிலையத்தில் இவர்களுடைய இணைப்பு ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.


இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸார், மாவட்ட நிர்வாகத்தினர், தீயணைப்பு துறையினர் என சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்துவிட்டனர். அவர்கள் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர். இதில் 9 பேர் தீயில் கருகி உயிரிழந்துவிட்டனர்.


அவர்களுடைய உடல்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த விபத்துக்கு காரணம் சிலிண்டரில் இருந்து வாயு லீக்காகி தீப்பிடித்ததுதான் காரணம் என்கிறார்கள்.


அதிகாரிகள் ஆய்வு செய்த போது ஒரு கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்களும் விறகு கட்டைகளும் கரிகளும் இருந்தன. இவை ரயிலில் கொண்டு செல்ல தடை விதித்திருக்கும் போது இவர்கள் மட்டும் எப்படி கொண்டு வந்தார்கள். ரயில் நிலையத்தில் இருந்த சென்சார்கள் பணியாற்றவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.



தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலாவுக்காக வந்திருந்த இடத்தில் இப்படியொரு எதிர்பாராத விபத்தால் சுற்றுலா வந்தவர்களும் இறந்தவர்களின் குடும்பத்தினரும் பரிதவித்து போயுள்ளனர். தண்டவாளங்களில் உட்கார்ந்தபடியே அவர்கள் அழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சிறுவன் சரத் கஷியாம் (11) ஏதோ சமஸ்கிருத மொழியில் சொன்னான்.


அதை கேட்ட தமிழக அதிகாரிகள் சிறுவன் ஏதோ இந்தியில் சொல்ல வருகிறார் என நினைத்து அங்கிருந்தவர்களிடம் என்ன என கேட்க , அதற்கு தமிழ் தெரிந்த பெண் ஒருவர் சிவப்பெருமானின் மகாகால ஸ்லோகத்தை சொல்கிறான் என்றார். உடனே அதிகாரிகள் சிறுவனை தட்டிக் கொடுத்து பாராட்டினர். அந்த சிறுவனுடன் வந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்து கண்ணீர் விட்டனர். இறந்தவர்களின் உயிரை கால பைரவன் எடுத்துச் சென்றதால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இந்த சிறுவன் இந்த ஸ்லோகத்தை சொல்லியுள்ளான் என தெரிகிறது.

 

 

Related Post