சர்வாதிகாரி ஜின்பிங்-விமர்சித்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்-சீனா செம்ம பதிலடி!

post-img

சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதற்கு சீனா கல்வியாளர்கள் தரப்பில், ஜோ பைடன் ஓட்டை வாயை மூட வேண்டும் என பதிலடி தரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார். அந்நிகழ்வில் அமெரிக்காவால், சீனா உளவு பலூன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை சுட்டிக் காட்டின் ஜோ பைடன் கருத்து தெரிவித்தார்.

அப்போது, சீனாவின் உளவு பலூன்கள் என்னால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அப்போது அந்த பலூனில் உளவு கருவிகள் இருந்தன. ஆனால் இந்த உளவு கருவிகள் பலூனில் இருந்ததை ஜி ஜின்பிங் அறியவில்லை. ஜி ஜின்பிங் போன்ற சர்வாதிகாரிகளுக்கு இது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சீனா மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது என ஜோ பைடன் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாகி உள்ளது. சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை ஒரு சர்வாதிகாரி என ஜோ பைடன் (ஜோ பிடன்) பகிரங்கமாக விமர்சித்திருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.

Biden, Xi could meet in person, US official says | AP News

அதுவும் அமெரிக்காவின் வெளி விவகாரத்துறை அமைச்சர் பிளிங்கன், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று முன் தினம் பெய்ஜிங்கில் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேசியிருந்தார். அப்போது, பொறுப்புடைய மனப்பாங்குடன் சீன-அமெரிக்க உறவைச் கையாண்டு உலக அமைதி, வளர்ச்சிக்கு இரு நாடுகளும் பங்காற்ற வேண்டும் என ஜின்பிங் கூறியிருந்தார். மேலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான உறவு சீராக வளர சீனா எப்போதுமே விரும்புகிறது.

ஒன்றுக்கொன்று மதிப்பு, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகியவற்றைக் கொண்ட சரியான தொடர்பு முறையை இரு நாடுகளும் கண்டறிய முடியும் என நம்புவதாகவும் ஜின்பிங் கூறியிருந்தார். அமெரிக்க தரப்பில் பிளிங்கன் கூறுகையில் இரு தரப்புறவைச் கையாளும் பொறுப்பு மற்றும் கடமை சீனா, அமெரிக்காவுக்கு உண்டு என்பது அதிபர் பைடன் நிலைப்பாடு.

கருத்து வேற்றுமைகளை பொறுப்புடன் கட்டுப்படுத்தி, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புகள் முடிவடைந்த ஈரம் காய்வதற்குள் ஜின் பிங்கை சர்வாதிகாரி என வெளுத்துவிட்டார் அமெரிக்கா அதிபர் பைடன்.

சீனா பதிலடி:

அமெரிக்கா அதிபர் பைடனின் இந்த கருத்துக்கு சீனா உடனடியாக பதிலடி தந்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், சீனாவின் அரசியல் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் பைடன் கருத்து தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவுகளுக்கான அம்சங்களை பைடன் மீறி இருக்கிறார்.

இது அமெரிக்காவின் அப்பட்டமாக அரசியல் ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும் என்றார். சீனாவின் அரசியல் வல்லுநர்கள் இது தொடர்பாக கூறுகையில், ஜோ பைடன் வாய் நீளம்தான். இப்படி நினைத்ததை எல்லாம் கருத்து சொல்லக் கூடாது எனவும் சாடியுள்ளார்.

இதனிடையே சீனாவுக்கு அமெரிக்காவின் அமைச்சரை அனுப்பி வைத்துவிட்டு அதே சீனாவின் அதிபர் ஜின் பிங்கை சர்வாதிகாரி என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பேசியிருப்பது அந்நாட்டின் குழப்பமான வெளியுறவு கொள்கையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என ரஷ்யா கடுமையாகவே விமர்சித்துள்ளது.

Related Post