மாஸ்கோ: சிரியாவில் இருந்து தப்பி ஓடிய அதிபர் ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவில் அவர்கள் பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
போராளி குழுக்கள் சிரியா தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதையடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யா வந்தடைந்தனர். ரஷ்ய அரசால் அவர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
50 வருடமாக நிலவி வந்த.. சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே ஆட்சி கவிழ ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற போராளி குழுதான் காரணம்.
அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. அபு முகமது அல்-ஜோலானி மிகவும் இளம் தலைவர் என்றாலும் அவருக்கு ராணுவ ரீதியாக நிறைய அறிவு உள்ளது. அதேபோல் அரசியல் ரீதியாகவும் நிறைய அறிவு உள்ளது.
தற்போது இந்த போராளி குழுதான் அங்கே போரில் வென்றுள்ளது. போராளி குழுக்களிடம் சரண் அடையும்படி வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 50 வருட ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் இருந்து அதிபர் பஷர் அல் ஆசாத் விமானத்தில் ரகசியமாக தப்பி ஓடிவிட்டார்.
50 வருட ஆட்சி: சிரியாவில் 50 வருடமாக ஆசாத் குடும்பம்தான் ஆட்சி செய்து வந்தது. 1960 தொடக்கத்தில் சிரியாவில் ஒற்றை ஆட்சி முறை வழக்கத்திற்கு வந்தது. ஹபீஸ் அல் அசாத் ஆட்சியில் நிலையாக உட்கார்ந்தார். மற்ற எதிர்க்கட்சிகள் கலைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ராணுவ ஆட்சி போல அவர் நடத்தி வந்தார். அப்போது ஆட்சிக்கு எதிராக கலக குரல்கள் வந்து கொண்டு இருந்தது.
ஹபீஸ் அல் அசாத் அவ்வப்போது கொஞ்சம் நன்றாகவே நடந்து கொண்டார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். ஆனால் அங்கு 90 சதவிகித மக்கள் சன்னி. அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். ஆனால் அதற்கு அடுத்தகட்ட பொறுப்புகளில் சன்னி மக்கள் இருந்தார்கள்.
அப்போது 1998 தொடக்கத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரது தம்பி ரிபாத்தை ஆட்சியில் அமர வைக்க முயற்சி செய்தார். ஆனால் ரிபாத் 1983ல் அரசுக்கு எதிராக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். பின் ஹபீஸின் முதல் மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
விதியின் குரூரம் இங்குதான் விளையாடியது. பதவி ஏற்க இருக்கும் சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். மீதம் இருந்தது பஷர் அல் ஆசாத் மட்டுமே. பஷர் அல் ஆசாத்திற்கு அரசியல் குறித்து ஒன்றும் தெரியாது. நன்றாக படித்தவர் என்றாலும் அரசியலில் எந்த அறிவும் இல்லை. அதிலும் இளைஞர் அவர்!
ஹபீஸ் 2000ல் மரணம் அடைந்தார். அப்போதுதான் சரியா பஷர் அல் ஆசாத் அதிபராக பதவி ஏற்றார். படித்த இளம் நபர் ஆட்சிக்கு வருகிறார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் எதிர்காலம் அவர்களுக்கு வேறு விதமான திட்டங்களோடு காத்து இருந்தது. வந்தவர் சன்னி ஷியா பிரச்சனையை உருவாக்கினார். இரண்டாம் கட்ட இடத்தில் இருந்த சன்னி மக்கள் முற்றிலும் அகற்றப்பட்டார்கள். அரசின் அனைத்து பிரிவுகளிலும் ஷியா மக்கள் அமர்த்தப்பட்டார். ஆசை ஆசையாக காத்து இருந்த மக்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்பா 30 வருடம் ஆசை தீர ஆண்டு மரணம் அடைந்தார். மகன் 26 வருடமாக ஆட்சி செய்து வருகிறார். இந்த 56 வருடங்களில் யாருக்கும் வேலை இல்லை. சரியான மருத்துவம் இல்லை. உணவு இல்லை என்று மூன்றாம் தர நாடாக சிரியா மாறி இருந்தது. இதை எதிர்த்துதான் போர் தொடங்கியது. உலக நாடுகள் அதிபருக்கு உதவியாக வந்தது. துபாய் போன்ற நாடுகள் போராளி குழுக்களுக்கு உதவியாக இருக்கிறது. இந்த போர் முடியும் என்பதற்காக எந்த அறிகுறியும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.
இந்த போரில் இதுவரை 5,11,271 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் இன்னும் பலரின் மரணம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இது 6 லட்சத்தை தாண்டும் என்று ஐநா அமைப்பு கூறியுள்ளது. பஷர் அல் ஆசாத் பிறந்த ஊரில் தான் இப்போது போர் உச்சம் அடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage