கல்லீரலை "காலி" பண்றதே இதுதான்.. இனி விடாதீங்க.. கல்லீரல் பலம்பெற அருமை நெல்லிக்காய்.

post-img

சென்னை: நம்முடைய உறுப்புகளிலேயே மிக முக்கியமான உறுப்பு கல்லீரல்.. இந்த கல்லீரலின் சிறந்த செயல்பாட்டுக்கு நாம் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் தெரியுமா?
உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, மொத்த உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்வது நம்முடைய கல்லீரல் ஆகும்.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் இந்த கல்லீரல்தான்.. புரதத்தை உருவாக்குவதும் இந்த கல்லீரல்தான்..
கல்லீரலை பாதுகாக்க 2 வழிகள் நமக்கு கை கொடுக்கின்றன.. ஒன்று, கல்லீரலுக்கு பலத்தை தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். மற்றொன்று, கல்லீரலுக்கு தொந்தரவுக்கு தரும் உணவுகளை தொடவே கூடாது.
சாப்பிடக்கூடாது: முக்கியமாக, மதுபானம், சிவப்பு இறைச்சி, உப்பு, சர்க்கரை, இனிப்பு அதிகம் நிறைந்த உணவுகள், பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு, வெள்ளை மாவில் செய்யப்படும் ரொட்டி, பீட்சா, பாஸ்தா போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
அதேபோல, திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட், எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், ஆப்பிள் சீடர் வினிகர், கீழாநெல்லி, மீன், முட்டை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர், க்ரீன் டீ போன்றவற்றை அதிகம் சேர்த்த கொள்ளலாம்.


நெல்லிக்காய்: இதில மிக முக்கியமானது, வைட்டமின் C அதிகமுள்ள நெல்லிக்காய் ஆகும்.. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் மிக மிக நன்றாக இருக்கும். அதுவும், ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள், தயிர், உப்பு சேர்த்து பச்சடிபோல செய்து சாப்பிட்டால், கல்லீரல் பலம்பெறும் என்கிறார்கள்..
அதேபோல, கல்லீரல் நோய்களுக்கு அதிமதுரம் பெரிதும் பயன்படுகிறது. இந்த அதிமதுரத்தின் வேர்களை, பொடி செய்து, டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட்டு, வடிகட்டி குடிக்கலாம். இப்படி 2 நாளைக்கு குடித்தாலே போதும்.. கல்லீரல் தொற்றுக்கள் நீங்கிவிடும்.
எலுமிச்சம் பழம்: தினமும் எலுமிச்சம் பழத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் உணவில் சேர்த்து கொள்ளலாம்.. இந்த பழத்திலிருக்கும் D-Limonene என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் கல்லீரல் செயல்பாட்டிற்கு பெரிதும் துணைபுரிகிறது.. அத்துடன், ஆரோக்கியமான என்சைம்களை அதிகரிக்கச் செய்து உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற செய்துவிடும்..
எலுமிச்சம் சாறு என்று தனியாக குடிப்பதைவிட, குடிக்கும் நீரில் ஒரு துண்டு எலுமிச்சையை போட்டுவைத்துவிட்டு, அந்த தண்ணீரையே நாள் முழுவதும் குடித்தாலே போதும். அதேபோல, கீழாநெல்லியை கல்லீரலின் காவலன் என்றே சொல்லலாம்..
கீழாநெல்லி: கீழாநெல்லி கீரை ஒன்று இருந்தாலே போதும், கல்லீரல் தொடர்பான அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.. பெரும்பாலும், மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால், அதை தீர்ப்பதற்காக இந்த கீழாநெல்லியை பயன்படுத்துவார்கள். இந்த கீரையை சுத்தம் செய்து விழுதாக அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால், காமாலை மட்டுமல்ல நீரிழிவு நோயும் சேர்ந்தே குணமாகும்.

 

Related Post