சென்னை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளுடன் லோன் எடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சமீபத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வீட்டில் திருமணம் நடந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது மகள் இஷாவை திருமணம் செய்து கொடுத்தார். இந்தியாவே கண்டிராத மிக விலையுயர்ந்த திருமணத்தை அவர் நடத்தி பலரையும் வியக்க வைத்தார்.
கிட்டத்தட்ட $100m (£80m) அதாவது 830 கோடி ரூபாய் செலவு செய்து அந்த திருமணத்தை நடத்தினார். இந்த வருடம் அதே முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்தியாவின் கலாச்சாரப்படி திருமணம் என்பது வெறும் திருமணமல்ல. அது ஒரு வகையில் பொருளாதாரத்தை வெளிப்படுத்தும் பண்டிகை. பலரும் எங்களிடம் எவ்வளவு காசு இருக்கிறது என்று காட்டுவதற்காக கூட திருமணங்கள் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.
மிகப் பெரிய செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்த நபர்களைக் கூட திகைக்க வைக்கும் வகையில் இந்தியாவில் திருமணங்கள் பிரம்மாண்டமாக நடப்பது வழக்கம். அந்த வகையில் உலகமே வியக்கும் விதமாக இந்தியா இன்னொரு பெரிய திருமணம் அம்பானி குடும்பத்தில் நடந்தது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு இடையிலான இந்த திருமணத்திற்காக மொத்தமாக 1000 கோடி ரூபாயை அம்பானி செலவு செய்தார். இது அவரின் சொத்து மதிப்பில் வெறும் 1 சதவிகிதம் மட்டுமே. ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 112 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். இவர் ஆற்றல் முதல் ஜவுளி மற்றும் தொலைத்தொடர்பு வரை பல துறைகளில் கோலோச்சி வருகிறார். கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி சொத்து கொண்ட முகேஷ் அம்பானி தன் வீட்டு திருமணத்திற்கு வெறும் 1000 கோடிதான் செலவு செய்கிறார். அதாவது வெறும் 1 சதவிகிதம் மட்டுமே செலவு செய்துள்ளார்.
கடன்: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளுடன் லோன் எடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பல்வேறு நிதி சுமைகள், பல இடங்களில் உள்ள வேறு விதமான கடன் தொகைகளை அடைக்கும் விதமாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) 3 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ. 25,500 கோடி கடனைப் பெற உள்ளது, மேலும் இது தொடர்பாக பல வங்கிகளுடன் கலந்துரையாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்போதுதான் பல கோடிகளை திருமணத்திற்கு செலவு செய்த முகேஷ் அம்பானி இப்போது லோன் எடுக்க உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 3 பில்லியன் டாலர் வரையிலான கடன் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் முகேஷ் அம்பானி லோன் எடுக்கிறார்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ந்து வரும் நிலையில்தான் முகேஷ் அம்பானி கடன் மேல் கடன் வாங்கி வருகிறார். கடனை அடைப்பது, வட்டியை செலுத்துவது, வியாபாரத்தை விரிவு செய்வது உள்ளட்ட காரணங்களுக்காக இந்திய வங்கிகள் மட்டுமன்றி வெளிநாட்டு வங்கிகளிடமும் கடன் வாங்கும் முடிவில் அம்பானி இருக்கிறார்.