தங்கம் மாதிரி அறிவிப்பு.. வங்கி கணக்கில் தேடி வரும் ரூ.5000.. அரசின் சூப்பர் முடிவு! யாருக்கு வருது?

post-img

சென்னை: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதாம். முக்கியமாக இந்த திட்டத்தை எளிமைப்படுத்தி நாடாளுமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட அரசு ஆலோசனை செய்து வருகிறதாம்.
வங்கி கணக்கில் மாதம் ரூ.5000 செலுத்தும் அரசு திட்டம் ஒன்று கவனம் பெற்று வருகிறது. மத்திய அரசு சார்பாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வு காலத்தில் வங்கி கணக்கிலேயே இந்த நிதி செலுத்தப்படும். அது என்ன திட்டம்.. இதில் எப்படி சேரலாம் என்று பார்க்கலாம். அந்த திட்டத்தின் பெயர் அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தில் பெரிய அளவில் முதலீடு செய்யாமல் நிறைய ஓய்வூதியம் ஈட்ட முடியும். எதிர்காலத்தில் நல்ல ஓய்வூதியம் பெற அடல் பென்ஷன் யோஜனா (APY) உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், 60 வயதை கடந்த பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.210 டெபாசிட் செய்வதன் மூலம், மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்.
இது வருமான வரி செலுத்தாத 18-40 வயதுக்குட்பட்ட சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவருக்கு முதியோர் வருமான பாதுகாப்புத் திட்டமாகும். அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களின் நீண்ட ஆயுட்கால அபாயங்களை நிவர்த்தி செய்வதில் இத்திட்டம் உதவுகிறது மற்றும் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்காக தானாக முன்வந்து சேமிக்க ஊக்குவிக்கிறது.
APY திட்டத்தின் நோக்கம்: இத்திட்டம் முக்கியமாக ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களை இலக்காகக் கொண்டது.

இந்த திட்டத்தின் பயன்கள்: சந்தாதாரர் 60 வயதை அடையும் போது பின்வரும் மூன்று நன்மைகளைப் பெறுவார்:
(i) உத்தரவாதமான குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை: APY இன் கீழ் ஒவ்வொரு சந்தாதாரரும் உத்தரவாதமான குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. மாதம் 1000/- அல்லது ரூ. மாதம் 2000/- அல்லது ரூ. மாதம் 3000/- அல்லது ரூ. மாதம் 4000/- அல்லது ரூ. மாதம் 5000/-, 60 வயதுக்குப் பிறகு இறக்கும் வரை வழங்கப்படும்.
(ii) வாழ்க்கைத் துணைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை: சந்தாதாரரின் மறைவுக்குப் பிறகு, சந்தாதாரரின் வாழ்க்கைத் துணை, சந்தாதாரரின் அதே ஓய்வூதியத் தொகையை இறக்கும் வரை பெறுவதற்கு உரிமையுடையவர்.

(iii) சந்தாதாரரின் நாமினிக்கு ஓய்வூதியச் செல்வத்தைத் திரும்பப் பெறுதல்: சந்தாதாரர் மற்றும் மனைவி இருவரின் மறைவுக்குப் பிறகு, சந்தாதாரரின் நாமினி சந்தாதாரரின் 60 வயது வரை திரட்டப்பட்ட ஓய்வூதியச் செல்வத்தைப் பெற உரிமையுடையவர்.
அடல் பென்ஷன் யோஜனா (APY)க்கான பங்களிப்புகள் பிரிவு 80CCD(1) இன் கீழ் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) போன்ற வரிச் சலுகைகளுக்குத் தகுதியுடையவை.
முக்கிய தகவல்: 60 ஆண்டுகளுக்கு முன் சந்தாதாரர் இறந்தால், சந்தாதாரரின் APY கணக்கில் பங்களிப்பைத் தொடர சந்தாதாரரின் மனைவிக்கு விருப்பம் இருக்கும பட்சத்தில் தொடரலாம். இது மீதமுள்ள காலத்துக்குத் துணைவரின் பெயரில் பராமரிக்கப்படும். சந்தாதாரர் 60 வயதை எட்டியிருப்பார். சந்தாதாரரின் மனைவி இறக்கும் வரை சந்தாதாரரின் அதே ஓய்வூதியத் தொகையைப் பெற சந்தாதாரரின் மனைவிக்கும் உரிமை உண்டு. இல்லையென்றால் திட்டத்தை நிறுத்திவிட்டு மனைவி திட்டத்தின் பலன்களை பெற தொடங்கலாம்.
APY இன் கீழ் கட்டணங்கள் மற்றும் வட்டி: APY இன் சந்தாதாரர்களிடமிருந்து கட்டணங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பங்களிப்பு தொகையை செலுத்தாத அல்லது தாமதமாக செலுத்துவதற்கான வட்டி விதிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் மற்றும் அவற்றின் விண்ணப்ப முறை ஆகியவை மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து அவ்வப்போது PFRDA ஆல் பரிந்துரைக்கப்படும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதாம். முக்கியமாக இந்த திட்டத்தை எளிமைப்படுத்தி நாடாளுமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட அரசு ஆலோசனை செய்து வருகிறதாம்.

Related Post