ஆதரவை விட அதிகமான எதிர்ப்பு.. கொங்கு மண்டலத்தில் விஜயின் செல்வாக்கு எப்படி? சத்தியம் டிவி சர்வே

post-img
சென்னை: தமிழகத்தில் 2026 ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வரும் சூழலில் கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு எப்படி உள்ளது? என்பது பற்றி சத்தியம் டிவி சர்வே மேற்கொண்டு ரிசல்ட்டை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. விஜய் கட்சி தனித்து போட்டியிடுகிறதா? இல்லாவிட்டால் கூட்டணி அமைத்து களமிறங்குகிறதா? என்பது இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் கட்சி மாநாட்டில் தனது தலைமையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளை ஏற்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் விஜயின் கட்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும். நடிகர் விஜயின் அரசியல் வருகையை மக்கள் எப்படி பார்க்கின்றனர்? என்பது பற்றி சத்தியம் டிவி சார்பில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டது. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 15 தொடங்கிய சர்வே 21 நாட்கள் நடந்தது. இந்த சர்வேயை பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என்று 110 பேர் மேற்கொண்டனர். அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் அந்த சர்வேயின் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கொங்கு மண்டலத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவை விட எதிர்ப்பு தான் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது கொங்கு மண்டலம் என்பது மொத்தம் 10 மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், நீலகிரி திண்டுக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் கொங்கு மண்டலமாக கருதப்படுகிறது. இங்கிருந்து சர்வேயில் பங்கேற்றவர்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 25 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மாறாக 29 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதவிர சர்வேயில் பங்கேற்றவர்களி்ல் 46 சதவீதம் ரேப் கருத்து இல்லை என்று கூறியுள்ளனர். இதன்மூலம் கொங்கு மண்டலத்தில் விஜய் கட்சிக்கு ஆதரவை விட எதரி்ப்பு தான் அதிகம் உள்ளது. அதேவேளையில் கோவை நகரில் நிலைமை வேறு விதமாக உள்ளது. அதாவது இந்த கொங்கு மண்டலத்தில் கோவை நகரை மட்டும் எடுத்து கொண்டால் சர்வேயில் பங்கேற்ற ஆண்களில் 32 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 41 பேர் கருத்தில்லை என்றும், 27 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பெண்களை எடுத்து கொண்டால் 26 சதவீதம் பேர் ஆதரவும், 21 சதவீதம் பேர் எதிர்ப்பும், 53 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post