பெங்களூர்: பெங்களூரில் காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு கேரளாவில் ஒரு சம்பவம் உலுக்கியது. அதாவது நண்பர்கள் தங்களின் மனைவிகளை மாற்றி உடலுறவு வைத்து கொண்டதும், அதுபிடிக்காத ஒரு பெண் தனது கணவர் மீது போலீசில் புகாரளித்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது.
அந்த வகையில் தான் தற்போது பெங்களூரில் ஒரு திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்க முயன்ற 2 இளைஞர்களை போலீசார் சிக்கி உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள இடம் தான் அத்திபெலே. இந்த பகுதியை சேர்ந்தவர் ஹாரீஷ் மற்றும் ஹேமந்த். இவர்கள் 2 பேருக்கும் 30 வயது ஆகிறது. டிகிரி படிப்பை முடித்த இவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 2 பேருக்கும் பெண் தோழிகள் உள்ளனர். அதேபோல் இருவருக்கும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அவர்களுக்கு விபரீத ஆசை வந்துள்ளது.
ஹாரீஸ் மற்றும் ஹேமந்த் ஆகியோர் காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் திட்டமிட்டு தங்களின் காதலிகளுடன் அவர்கள் வெளியே செல்லும்போதுநெருக்கமாக இருப்பதை அவர்களுக்கு தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் காதலிகளை மாற்றி உடலுறவு வைப்பது பற்றி சம்பந்தப்பட்ட பெண்களிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஹாரீஸின் காதலியான இளம்பெண் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், ‛‛சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாரீசுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. டேட்டிங் மற்றும் பார்ட்டிகளில் சேர்ந்து பங்கேற்றோம். இருவரும் உடலுறவு வைத்து கொண்டோம். அப்போது அவர் எனக்கு தெரியாமல் போட்டோ, வீடியோ எடுத்துள்ளார்.
இப்போது அதனை காட்டி மிரட்டி நண்பருடன் படுக்கையை பகிரும்படி கட்டாயப்படுத்துகிறார். இதற்கு கைமாறாக ஹேமந்த் அவரது காதலியை ஹாரீசுடன் உடலுறவு வைக்க அனுமதிக்க உள்ளதாக கூறுகிறார் என்று புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி ஹாரீஸ் மற்றும் ஹேமந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் போலீசார் விசாரைண நடத்தினர். இந்த விசாரணையின்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛கைதான ஹாரீஸ் மற்றும் ஹேமந்த் ஆகியோர் காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள். இவர்கள் இதற்கு முன்பும் பெண்களை ஏமாற்றி மாறிமாறி உல்லாசம் அனுபவித்துள்ளனர். அவரகள் வைத்திருந்த செல்போனில் இருந்த வீடியோக்களில் பல பெண்களுடன் சேர்ந்து இருக்கின்றனர். அந்த பெண்கள் யாரும் புகாரளிக்க முன்வரவில்லை. அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர். இந்த சம்பவம் பெங்களூரை அதிர வைத்துள்ளது.