சனி பெயர்ச்சி பலன் 2023.. இந்த 6 ராசிக்காரர்கள் தப்பிக்கவே முடியாது.. ஹுக்கும் சனி

post-img

சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பயங்கரமான பாதிப்புகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். சனி பகவானால் சங்கடத்திற்கு ஆளாகியுள்ள 6 ராசிக்காரர்கள் பற்றி ஜெயிலர் பாணியில் மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ஒரு ஜோதிடர்.


கடகம்: அஷ்டமத்து சனி காலம். ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினால் அடங்கி போய் விட வேண்டும் என்று சொல்லாமல் சொல்லுவார் சனி பகவான் ஏழரையை விட இரண்டரை ஆண்டு காலம் படாத பாடு படுத்தி விடுவார் சனிபகவான். அஷ்டமத்து சனிக்கு கஷ்ட காலம்தான் என்றாலும் ராகு, கேது, குரு பகவான் பக்கத்துணை இருப்பதால் தப்பி பிழைத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் அடிமேல் அடி விழுந்தாலும் அமைதியாக கடந்து விடுங்கள். தலை மட்டுமே கலையும் சட்டை களைய வாய்ப்பு இல்லை.


கும்பம்: ஜென்ம சனி.. கெத்தாக வாழ்ந்தாலும் கொத்தாக எதையாவது இழந்து கொண்டேதான் இருக்கிறார்கள் கும்ப ராசிக்காரர்கள். முடி களையாமல் இருந்தாலும் சட்டை கிழிந்து காட்டி கொடுத்து விடுகிறது. சனி சும்மா அதிரடி ஆட்டம்தான் போங்கள். இன்னும் 5 வருடம் சனி அலப்பறையை தாங்கித்தான் ஆக வேண்டும்.


விருச்சிகம்: ரொம்ப பாவப்பட்டவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்தான். ஏழரையை தாண்டி விட்டோமே என்று நினைத்த நிலையில் ஜென்ம கேது வாட்டி வதக்கியது. இப்போது அர்த்தாஷ்டம சனி சும்மா விடுமா? தலை கலையாமல் இருந்தாலும் சட்டை களையாமல் இருந்தாலும் காதில் ரத்தம் வரும். அம்மாவின் பாடுதான் படு பயங்கரம் சூப்பரு என்பார் சனி பகவான்.

மகரம்: ஏழரை சனியில் பாத சனி.. 5 வருடம் அடித்து ஆடினார் சனி பகவான் இன்னும் இரண்டரை ஆண்டுதான் சும்மா இருந்தாலே கடந்து விடுவார். வாயை திறந்தாலோ வம்பு சும்மா தலைமேல் வந்து அமரும். அப்புறம் ரத்த காயம் படவேண்டியதுதான். இரண்டரை வருஷம் வாயை திறக்கவே கூடாது மவுன விரதமே பெட்டர். வாழ்க்கையை ஓட்டி விடலாம். இல்லாட்டி தலைவர் சனிபகவானின் அலப்பறையை பார்க்க வேண்டியிருக்கும்.

 

சிம்மம்: எப்பவுமே சூரியனுக்கும் சனிக்கும் ஆகவே ஆகாது. அதுவும் இப்போது கண்டச்சனி காலம். சனியின் நேரடி பார்வையில் இருக்கிறார் சிம்ம ராசிக்காரர். அவரிடம் போய் வாயை விடலாமோ. அப்புறம் என்ன நடக்கும்? சனிதான் கிங்.. சனி வைத்ததுதான் ரூல்ஸ். அதை பாலோ செய்யாவிட்டால் படாத படு பட வேண்டியிருக்கும். சனியோட ரூல்ஸ்களை பின்பற்றினாலே ரத்த காயமின்றி ஒரு கீறல் இன்றி தப்பி விடலாம். இல்லாவிட்டால் சீட்டை கலைத்துப்போடுவது போல வாழ்க்கையையே கலைத்துப்போட்டு விடுவார் சனிபகவான் ஹுக்கும்.

 

Related Post