வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அதற்கு 40 விழுக்காடு கூடுதல் ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த மாதத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் உயரத் தொடங்கியிருந்தது.
விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் வெங்காய விளைச்சல் மற்றும் அறுவடை அதிகரிக்க இருக்கிறது. அதுவரை உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது வரை மத்திய அரசின் கைவசம் 3 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த கூடுதல் வரிவிதிப்பு பொருந்தும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.