இந்தியாவின் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களை பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பெரிதாக இல்லை. கச்சா எண்ணெய் விலை 140 டாலரில் இருந்து 72 டாலராக குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. அதோடு இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வர்த்தகத்தில் மொத்தமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிகர லாபம் பார்த்துள்ளது.
இந்த நிலையில்தான் மக்கள் நலன் கருதி இந்தியாவின் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களை பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவிற்கு பின் இந்த நிறுவனங்கள் பொருளாதார சரிவில் இருந்து மீண்ட நிலையில்தான் தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் கடந்த வருடம் பாதி வரை பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.
மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.
தற்போது சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி வரி;
இந்த நிலையில்தான் தற்போது திடீரென சுத்திகரிக்கப்பட்ட சோயா பீன், சூரியகாந்தி எண்ணெயின் அடிப்படை இறக்குமதி திடீரென இந்தியாவில் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் 17.5%-லிருந்து 12.5% குறைத்து அறிவித்தது மத்திய அரசு, இதனால் உள்நாட்டு சந்தையில் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இறக்குமதி வரி குறைந்ததால் விரைவில் விற்கப்படும் பொருட்டாக்களின் வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஸ் சிலிண்டர்: இன்னொரு பக்கம் விரைவில் நாடு முழுக்க வீட்டு சிலிண்டர் கேஸ் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை - எல்பிஜி விலை சர்வதேச சந்தை விலையை அதிகளவில் சார்ந்துள்ளது. சென்னை- இன்று மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 1,118.50 ஆக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இதன் 1,068.50 ரூபாயாக இருந்தது. மார்ச்சில் இதன் விலை ரூபாய் 50 உயர்ந்துள்ளது. அதன்பின் வீட்டு சிலிண்டர் உயரவில்லை. கடந்த மார்ச் மாதம் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது.
19 கிலோ சிலிண்டர் விலையானது ரூ.171.50 குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2193 ரூபாய் இருந்த வணிக சிலிண்டரின் விலையானது ரூ.2021.50 என விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாடு முழுக்க வீட்டு சிலிண்டர் கேஸ் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி வீட்டு சமையல் சமையல் சிலிண்டர் விலை பெரும்பாலும் ரூபாய் 150- 180 ரூபாய் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.