டெல்லி: தாய்லாந்திலிருந்து சூரிச்சிற்கு சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் தம்பதி உடலுறவில் ஈடுபட்ட வீடியோவை வர்ணனனையுடன் வெளியிட்டதாக ஸ்விஸ் விமான குழுவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இணையதளம் வந்தாலும் வந்துவிட்டது, ஆனால் என்னத்ததான் வெளியிட வேண்டும் என்ற ஒரு அர்த்தமே இல்லாமல் சிலர் எதை எதையோ வெளியிட்டு வருகிறார்கள். இது போல் வெளியிடும் வீடியோ பிறரை எப்படி பாதிக்கும் என்பதை கூட யாரும் யோசிப்பதில்லை.
அந்த வகையில் ஸ்விஸ் விமானத்தில் பயணித்த தம்பதி, திடீரென விமானத்திலேயே உடலுறவு கொண்டனர். இது சிசிடிவிவியில் வீடியோவாக பதிவானதை அங்கிருந்த விமான குழுவினர் அதை ரிலீஸ் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நவம்பர் 29ஆம் தேதி பாங்காங்கில் இருந்து சூரிச் எனற பகுதிக்கு ஸ்விஸ் இன்டர்நேஷனல் விமானமான போயிங் 777 என்ற விமானம் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு தம்பதி திடீரென காக்பிட் அருகே சென்று உடலுறவில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை எதேச்சையாக விமானத்தின் பைலட்களும் விமான குழுவினரும் பார்த்துள்ளனர். அப்போது அங்கிருந்த அவர்கள் தங்கள் செல்போனில் அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்துக் கொண்டனர்.
பிறகு அந்த உடலுறவு காட்சிக்கு அவர்கள் வர்ணனை கொடுத்தனர். அதை அப்படியே வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்டிருந்தனர். இது பயணிகளின் தனியுரிமையை கேள்விக்குறியாக்கிவிட்டதாக பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அந்த பயணிகள் செய்தது தவறே என்றாலும் கூட அதை எப்படி அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அதை பகிரங்கப்படுத்தலாம் என்ற கேள்வி மேலெழுந்தது. இந்த விவகாரம் ஸ்விஸ் விமான நிர்வாகத்தின் காதுகளுக்கு சென்றனது. அப்போது அவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ஒரு நபரின் விருப்பம் இல்லாமல் அவரை வீடியோ எடுப்பது தவறு. அதிலும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்தது அதைவிட பெரிய தவறு.
பொது இடத்தில் தம்பதி செய்தது தவறு என்றாலும் கூட எங்கள் ஊழியர்கள் எங்கள் புரோட்டோக்கால் படி நடந்திருக்க வேண்டும். எனவே அந்த போயிங் 777 விமானத்தின் குழுவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்று சமயங்களில் அதை தடுத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage