புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டில் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தியாகும் புதன் கிரகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..
பொதுவாக ஒரு ராசியில் குறுகிய காலம் சஞ்சரிக்கக் கூடிய கிரகம் என்றால் அது சந்திரன்தான். சந்திர பகவானுக்குப் பிறகு குறுகிய காலம் ஒரு ராசியில் சஞ்சரிக்கக் கூடிய கிரகம் புதன். தற்போது புதன் கிரகம் விருச்சிக ராசியில் வக்கிர நிவர்த்தியாகிறார். இதன் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டங்கள் கொட்டப் போகின்றன.
விருச்சிர ராசியில் பணம் செய்து வரும் புதன் பகவான் டிசம்பர் 16 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். நேராகப் பயணம் செய்யும் இந்த புதன் பகவான் 2025 ஜனவரி 4 ஆம் தேதி தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். புதனின் வக்கிர நிவர்த்தியால் மிதுனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது.
மேஷம் (New year rasi palan for Mesham): மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தியால் ஆன்மீகம், வழிபாடு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வெளியூர், வெளிநாடு பயணங்கள் அனுகூலமான பலன்களைத் தரும். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய செயல்கள் அனைத்திற்கும் பாராட்டைப் பெறுவீர்கள். அரசு துறையில் உள்ளவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். படிப்பு, எழுத்து துறையில் இருக்கும் நபர்கள் புகழை அடைவீர்கள். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் பெறுவதற்கும், விரும்பிய துறைகள் கிடைப்பதற்கும் சாதகமான காலநிலை உள்ளது.
மிதுனம் (New year rasi palan for midhunam): மிதுன ராசிக்கு அதிபதியாக புதன் பகவான் உள்ளார். புதன் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றியை காண்பீர்கள். வியாபாரம், கூட்டுத் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். கணக்கு வழக்குகளை முறையாக வைத்துக் கொள்வது நல்லது. அரசிடமிருந்து ஆதரவான சூழ்நிலை உண்டாகும். சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திருமண யோகங்கள் கூடி வரும். உறவினர்களின் அனுசரணை, ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நல்ல முன்னற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும்.
சிம்மம் (New year rasi palan for simmam): சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி பல்வேறு சாதகமான பலன்களை அள்ளிக் கொடுக்கும். போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், கல்வியில் வெற்றி பெறுவீர்கள். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கை கைகூடி வரும். காதல் திருமணங்கள் வெற்றியடையும். சகோதரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களுடைய எதிர்கால திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்வதன் மூலமாக சிறப்பான வெற்றியைக் காண்பீர்கள். திருமணத்துக்காக காத்திருந்தவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள்.
கன்னி (New year rasi palan for kanni): கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி நல்ல முன்னேற்றத்தை தரப் போகிறது. உறவினர்கள், நண்பர்கள் மூலமாக நல்ல செய்திகள் வீடு தேடி வரும். வெளி பயணங்களால் நல்ல ஆதாயம் காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம் (New year rasi palan for kumbam): கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி பல்வேறு அதிர்ஷ்டங்களைத் தரும். புதிய ஒப்பந்தகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. பெரிய வேலை, வியாபாரத்தை தொடங்குவீர்கள். அதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வேலைகளில் மாற்றம் உண்டாகும். பழகுபவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய வேலை, பொறுப்பை உணர்ந்து செயல்படுவது வெற்றியைத் தேடித் தரும். காதலிப்பவர்களுக்கு திருமணம் உண்டாகும். வேலையில் மாற்றம் வேண்டுவோருக்கு நிச்சயமாக மாற்றம் ஏற்படும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.