சென்னை: சென்னை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராஷ்மி சித்தார்த் ஜகடே தற்போது, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலராகப் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராக ஹனிஷ் சாப்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையராக நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஊரக மேம்பாட்டுத் திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி, ஆ.ராசா கருத்தில் உடன்பாடில்லை.. பட்டென சொன்ன காங்கிரஸ் தலைவர்: திரும்பிப் பார்க்கும் திமுக!
Weather Data Source: Wettervorhersage 21 tage