மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழக்கும் பாஜக.. துள்ளி குதிக்கும் காங்கிரஸ்..

post-img

போபால்: ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு ஊடக நிறுவனங்களும் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மலையாள மனோராமா கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.


ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா 5 ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் வரும் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது . முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது.


எனினும், பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவினார். அதன் தொடர்ச்சியாக பாஜக அங்கு மீண்டும் ஆட்சிக்கு வந்தது.


மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 128 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் அக்கட்சி தோல்வியை சந்திக்கும் என மலையாள மனோரமா மற்றும் விஎம்.ஆர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்துள்ளன.


இது தொடர்பாக மலையாள மனோரமா மற்றும் விஎம்.ஆர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் அக்கட்சி தோல்வியை சந்திக்கும். அதாவது, மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 95 முதல் 105 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழக்கும் எனவும் காங்கிரஸ் கட்சி 120 முதல் 130 தொகுதிகள் வரை வென்று ஆட்சியை பிடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய பிரதேச மொத்த சட்டசபை தொகுதிகள் - 230
காங்கிரஸ் - 120 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெறும்.
பாஜக - 95 முதல் 105 தொகுதிகளில் வெற்றி பெறும்.
 மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு "இடி" பூரிக்கும் காங்கிரஸ்.. ஏபிபி சி வோட்டர் பரபர கருத்துக்கணிப்பு
G மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு "இடி" பூரிக்கும் காங்கிரஸ்.. ஏபிபி சி வோட்டர் பரபர கருத்துக்கணிப்பு

 

Related Post