அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள், தக்காளிகள் வீச்சு.. வீட்டுக்குள் புகுந்து பூந்தொட்டிகள் உடைப்பு!

post-img
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள், தக்காளிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் வீட்டுக்குள் புகுந்து பூந்தொட்டிகளை உடைத்தனர். புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் ஷோ வெளியிடப்பட்டது. அங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களோடு படம் பார்த்தார். அப்போது அவர் வருவது தெரிந்ததும் தியேட்டர் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அல்லு அர்ஜுனை பார்ப்பதற்கு ஒருத்தரை ஒருத்தர் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு படம் பார்க்க வந்திருந்த ரேவதி என்ற பெண் ரசிகை உயிரிழந்தார். மேலும் அவரது மகன் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் பூதாகரமாகியது. நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு நாள் முழுக்க சிறையில் இருந்தார். அவருக்கு ஆதரவாக நடிகர்கள், நடிகைகள் பலரும் கருத்து கூறி வந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுனை விமர்சிக்கும் வகையில் பேசினார். நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரை பலரும் பார்த்து வந்தார்கள் என்றும், அவருக்கு கை இல்லாமல் ஆகிவிட்டதா, இல்லை கால் இல்லாமல் ஆகிவிட்டதா என்று பேசினார். இந்த விவகாரம் அங்கு பூதாகரமாகி வரும் நிலையில் இன்று நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள், தக்காளிகள் வீசப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டுக்குள் ஒரு கும்பலினர் புகுந்தனர். அங்குள்ள பூந்தொட்டிகளை அடித்து உடைத்தனர். மேலும் கற்கள், தக்காளிகை வீட்டுக்குள் வீசினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இது குறித்த் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்ந்து வந்தனர்.

Related Post