நாயோ நரியோ மாடோ மனுஷனோ! மரியாதை முக்கியம்! ஏர்போர்ட்டில் குரங்குகிட்ட இந்த பெண் என்ன சொல்கிறார்?

post-img
டெல்லி: விலங்கோ மனிதனோ மரியாதை என்பது முக்கியம். அது ஐந்தறிவு ஜீவனாக இருந்தாலும் நமக்கு ஆறறிவு இருப்பதால் விலங்குகளை ஏய் ஊய் என மிரட்டுவதை கைவிட வேண்டும். சொல்லும் விதத்தில் சொன்னால் ஐந்தறிவாக இருந்தாலும் சொல் பேச்சை கேட்பார்கள் என்பதற்கான உதாரணத்தை பார்க்கலாம். பொதுவாக நம் வீட்டுக்குக் கூட இல்லை, வீட்டு கேட் முன்பு, நாயோ, குரங்கோ மாடோ வந்து நின்றால் நாம் என்ன செய்வோம்! ஏய் போ, ஏய் ச்சீ போ என அந்த ஜீவன்களை விரட்டுவோம். இல்லாவிட்டால் அடிக்க கை ஓங்குவோம், கம்பை எடுத்து அடித்தே கூட சிலர் அநியாயம் செய்வார்கள். நாம் கோபமாக சொல்வதையே புரிந்து கொள்ளும் இந்த ஜீவன்கள் நிச்சயம் மரியாதையாக சொல்வதை கேட்டு அதன்படி நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவை எல்லாம் நம் வீட்டு வாசலை தேடி ஏன் வருகின்றன? நம்மை போல் அவைகளுக்கும் வயிறு உண்டாயிற்றே! யாராவது நமக்கு உணவளிப்பார்களா என பார்க்கத்தான்! அது போல் உங்களிடம் இருக்கும் உணவை கொடுத்தால் அது சாப்பிட்டுவிட்டு போய்விடும். அதைவிட்டுவிட்டு அதன் இயலாமையை ஏளனம் செய்வது போல் விரட்டுவது எந்த விதத்தில் நியாயம். தெருவோர கடைகள் முன்பு நாம் சாப்பிடுவதையே பாவமாக பார்க்கும் நாய்களை பார்த்தால் நமக்கு இரக்கம் வராதது ஏன்? மிரட்டுவது, விரட்டுவது, காலால் எட்டி உதைப்பது, தண்ணீர் ஊற்றுவது, எதையாவது கொண்டு எறிவது... இப்படித்தானே இந்த ஜீவன்களை விரட்டி வருகிறோம். ஆனால் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவை பாருங்கள். அதில் ஒரு பெண், குரங்கிடம் எத்தனை மரியாதையாக பேசுகிறார்! சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இது! அந்த விமான நிலையத்தில் பயணிகள் எல்லாம் பிஸியாக அங்கும் இங்கும் சென்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு திடீரென குரங்கு வந்துவிட்டது. இதை கண்ட பயணிகள் கண்டும் காணாமல் போகிறார்கள். சிலர் அஞ்சுகிறார்கள், சிலர் "குரங்கு போர்டிங் பாஸ் எடுக்க போகுது" என கிண்டல் செய்கிறார்கள். அவ்வழியாக போவோர் எல்லாம் ஹேய் ஊய் என விரட்டுகிறார்கள். ஆனாலும் அது நகரவே இல்லை. அப்போது அந்த விமான நிலையத்தின் பெண் ஊழியர் ஒருவர் சீருடை அணிந்து வருகிறார். அவர் அந்த குரங்கிடம் மிகவும் மரியாதையாக பவ்யமாக வெளியேறும் வழி அங்கே இருக்கிறது என்கிறார். அந்த குரங்கை வெளியேறும் வழி வழியாக அழைத்துச் செல்கிறார். அது தடம் மாறும் போது "இங்கு இல்ல , அங்கு அந்த பக்கம், அதோ இருக்கு பாருங்கள், அந்த பக்கமாகதான் வெளியே போகணும்! ப்ளீஸ் போங்க" என மரியாதையாக சொல்கிறார். அந்த குரங்கும் அவர் சொல்வதை கேட்டு வெளியேறுகிறது. அந்த குரங்கை வெளியேற்றும் போது அந்த பெண்ணுக்கு எத்தனை பவ்யம்! இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அந்த பெண்ணுக்கு விருது அல்லது பரிசு கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். அதிலும் அவருடைய கைகளில் காட்டும் சைகைகளிலேயே அந்த பெண் உயிர்களிடத்தில் எத்தனை அன்பு செலுத்துகிறார் என்பது தெரிகிறது. சிலர் அந்த பெண்ணின் செயல்பாட்டை பார்த்து சிரிக்கிறார்கள். குரங்கிடம் இத்தனை பவ்யம் காட்டியது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். கமென்ட்டில் சொல்லுங்கள். மேலும் நீங்கள் அந்த சூழலில் இருந்தால் எப்படி கையாள்வீர்கள்?

Related Post