பிரிக்ஸ் குழுவில் இணைந்த 6 நாடுகள்! இந்தியாவிற்கு ஜாக்பாட்-அமெரிக்கா ஷாக்

post-img

அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். கடந்த 3 வருடங்களாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கூட்டம் இந்த முறை நேரடியாக தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது.

ஜோஹென்ஸ்பர்க்கில் நடக்கும் இந்த கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன் ஜோஹென்ஸ்பர்க் சென்றார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது. தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபர் சிரில் ராமபோசா இன்று பிரிக்ஸ் கூட்டத்திற்கு பின் உரையாற்றினார். இன்று நடந்த உச்சிமாநாட்டின் முடிவுகளை அறிவிக்கும் போது புதிய உறுப்பினர் நாடுகளின் பெயர்களை அறிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் பலத்தை அதிகரிக்கும் விதமாகவும், கூட்டமைப்பை பெரிதாக்கும் விதமாகவும் இந்த உறுப்பினர் சேர்க்கை நடந்து உள்ளது. பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில்தான் தற்போது எண்ணெய் வளம் நிரம்பிய நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்கள் குழுவில் சேர்த்து உள்ளது. இதன் மூலம் உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஆறு நாடுகள் பிரிக்ஸ் குழுவில் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும். இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிரிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும்.

புதிய பலம் அடையும்: இதனால் உலக அரசியல் மிகப்பெரிய அளவில் மாற்றம் அடையும். எண்ணெய் வள ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் உலக நாடுகளை கட்டுப்படுத்துவதோடு பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகளை பிரிக்ஸ் நாடுகள் இனி கட்டுப்படுத்தும்.

முக்கியமாக பிரிக்ஸ் நாடுகளின் இந்த முடிவு மேற்கு உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தானை சேர்க்க சீனா அழுத்தம் கொடுத்தது.

ஆனால் பாகிஸ்தானை சேர்க்க கூடாது என்பதில் இந்தியா இதில் உறுதியாக இருந்தது. இதனால் கடைசியில் பாகிஸ்தானை சேர்க்கும் முடிவு கைவிடப்பட்டது. இதில்  தொடக்கத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவாக்குவதையே இந்தியா எதிர்த்தது. ஆனால் அதன்பின் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. கூடுதல் நாடுகள் இருக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு அது வலிமை சேர்க்கும் என்பதால் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

இதன் மூலம் உலகின் 30 சதவிகித பொருளாதாரத்தை பிரிக்ஸ் நாடுகள் பூர்த்தி செய்ய உள்ளன. விரிவாக்கப்பட்ட BRICS இன் GDP (தற்போதைய நிலை).

பிரேசில்: $2.1 டிரில்லியன்

ரஷ்யா: $2 டிரில்லியன்

இந்தியா: $3.7 டிரில்லியன்

சீனா: $19.3 டிரில்லியன்

தென்னாப்பிரிக்கா: $0.4 டிரில்லியன்

அர்ஜென்டினா: $0.6 டிரில்லியன்

எகிப்து: $0.4 டிரில்லியன்

எத்தியோப்பியா: $0.15 டிரில்லியன்

ஈரான்: $0.36 டிரில்லியன்

சவுதி அரேபியா: $1 டிரில்லியன்

அமீரகம்: $0.5 டிரில்லியன்

மொத்தம்: $30.5 டிரில்லியன் (உலகப் பொருளாதாரத்தில் 30%)


Related Post