சென்னை: இந்தியாவின் இளம் சதுரங்க நட்சத்திரம், டி. குகேஷ், வரலாறு படைத்து, உலகின் இளம் சதுரங்க சாம்பியனாகியுள்ளார். 18 வயதான இவர், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 14-வது மற்றும் இறுதி ஆட்டத்தில், சீனாவின் தற்போதைய சாம்பியன் டிங் லிரனை வீழ்த்தினார். 14 ஆட்டங்களில் 7.5 புள்ளிகள் பெற்று, லிரனின் 6.5 புள்ளிகளை முறியடித்து சாதித்தார்.
இந்திய சதுரங்கத்தின் புதிய நட்சத்திரம் குகேஷ், உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்! இதன் மூலம், 22 வயதில் இந்த பட்டத்தை வென்று சாதனை படைத்த கரீ காஸ்பரோவின் நீண்ட நாள் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த வெற்றிக்குப் பின், குகேஷுக்கு 11.45 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தில் வெற்றி பெற்றவருக்கு 1.69 கோடி ரூபாய் வழங்கப்பட்டதால், மூன்று ஆட்டங்களில் வென்ற குகேஷுக்கு மொத்தம் 5.07 கோடி ரூபாய் கூடுதல் பரிசாக கிடைத்துள்ளது. இதன் மூலம், சில நாட்களில் அவர் 17 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளார்!
முந்தைய போட்டிகளில் வென்ற தொகை மற்றும் விளம்பர வருவாயையும் சேர்த்தால், குகேஷின் மொத்த வருமானம் 25 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இவ்வளவு இளம் வயதில் இத்தனை பெரிய தொகையை சம்பாதித்திருப்பது குகேஷின் வெற்றியின் அளவை காட்டுகிறது.
குகேஷின் நிகர மதிப்பு: குகேஷ் இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார். இதில் முந்தைய போட்டிகளில் வென்ற தொகை மற்றும் விளம்பர வருவாயும் அடங்கும். இந்த வெற்றியின் மூலம், அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.25 கோடியைத் தாண்டியுள்ளது. குகேஷ் ஏப்ரல் மாதம் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்திற்கு தகுதி பெற்றார். இந்த போட்டி 14 சுற்றுகளாக நடைபெற்றது. குகேஷின் வெற்றி சதுரங்க உலகில் புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது. இளம் சாம்பியன் உலகெங்கிலும் உள்ள புதிய தலைமுறை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரர்களை விட இவரது சொத்து மதிப்பு குறைவுதான். ஆனால் செஸ் மூலமாக இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதே பெற்றோருக்கு ஒரு உத்வேக தகவல் அல்லவா..