சென்னை: தினமும் பல லட்சம் வாகனங்கள் செல்லும் ஈசிஆர் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.24,435 கோடியில் மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து, மாமல்லபுரம் - மரக்காணம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்போது மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விரிவாக்கத் திட்டத்திற்காக தயாரிக்க ஒரு நிறுவனத்தை வாடகைக்கு எடுக்க NHAI டெண்டர் எடுத்துள்ளது. மொத்தம் 675 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலைகள் மேம்படுத்தப்பட்டு 4 வழி சாலையாக மாற்றப்பட உள்ளது.
மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரை, நான்கு வழிப் பாதை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில், தேவையான இடங்களில், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தடையின்றிசெல்ல கிரேடு பிரிப்பான்கள், மேம்பாலங்கள் மற்றும் வாகன சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகிறது. நகரங்களுக்கு இடையூறு விளைவிப்பதற்குப் பதிலாக வெளியே செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பெரிய அளவில் வளைவுகள் இல்லாமல் நேராக செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான இயக்கத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஆய்வின் அடிப்படையில் இந்த சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த சாலை பணிகள் நடக்க உள்ளன. 8 பிரிவுகள் என்றால்.. தனி தனியாக இந்த 675 கிலோ மீட்டரை பிரித்து.. அதன்பின் அதில் சாலை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
எல்லா பணிகளும் அடுத்த வருடம் இறுதிக்குள் முடியும். அதே சமயம் இந்த எட்டு பிரிவுகளில், புதுச்சேரி-பூண்டியாங்குப்பம் (கடலூர்) பாதையை விரிவாக்கம் செய்வதற்கான காலக்கெடுவாக இந்த ஆண்டு நவம்பர் மாதத்தை NHAI நிர்ணயித்துள்ளது.
4 வழி மாநில சாலைகளில்.. இனி நோ டோல்கேட்.. தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு.. பொதுமக்கள் நிம்மதி
அடுத்த மாதம் இது முடியும். இந்த 1 கட்டத்தின் 38 கிமீ நீளம் இந்த மாதம் வரை 92% நிறைவு செய்துள்ளது. அதனால் அடுத்த மாதம் இந்த 1 கட்ட பணிகள் முடியும். இதேபோல், மாமல்லபுரம்-முகையூர் இடையேயான 31 கி.மீ., தூரம் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூண்டியாங்குப்பம்-சத்தநாதபுரம்-நாகப்பட்டினம் பிரிவில் சுமார் 113கிமீ தூரம் வரை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. முகையூர் - மரக்காணம் வரையிலான 31 கி.மீ தூரத்தில் விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்ததாரருடன் சமீபத்தில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாகப்பட்டினம்-ராமநாதபுரம்-தூத்துக்குடி பிரிவுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று முடிந்த நிலையில், 46 கிமீ மரக்காணம்-புதுச்சேரி பகுதியை மேம்படுத்த NHAI ஏலம் கோரியுள்ளது, மேலும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன் அடுத்த நிதியாண்டில் திட்டம் தொடங்கப்படும். இதற்கு தேவையான அனுமதிகள் பெறப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்கவே பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை 15.7 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் வெளியே செல்லும் ஈசிஆர் சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது.