2025 இல் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா?.. உங்க பிறப்பு தேதிப்படி 2025 சாதகமா?.. பாதகமா?

post-img

புத்தாண்டு பலன் 2025: 2025 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. இந்த ஆண்டில் விபரீத ராஜயோகம் யார் பெறப்போகிறார்கள். 1 முதல் 5 ஆம் தேதியில் பிறந்தவர்கள், கூட்டுத் தொகை 1 முதல் 5 எண்ணில் வரும் தேதியில் பிறந்தவர்கள் என்னென்ன பலன் பெறப்போகிறார்கள் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்...
01-01-2025 புத்தாண்டு பிறக்கிறது. பிறவி எண் 1 ஆம் தேதியாக இருந்தாலும், கூட்டு எண் இரண்டாக வருகிறது. சூரியனும், சந்திரனும் கலந்த வருடம் இந்த 2025. வருடத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் 2025 என்பது 9 எண்ணாக வருகிறது. 9 என்பது செவ்வாய் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், நில புலன் சம்பந்தமான விஷயங்கள், தொழில் முறையில் நல்லது நடக்குமா என்பது குறித்து முடிவெடுப்பது செவ்வாய்தான்.
செவ்வாய் என்பது பூமிக்காரகன். இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாக அமையும். 9 எண் நெருப்பு கிரகம். எனவே, 2025 புத்தாண்டில் தங்களுக்குத்தானே புத்துணர்ச்சி, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டை நன்மை பயக்கும் ஆண்டாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. விஞ்ஞானம் வளர வளர அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆண்டு உணர்த்தும்.
2025 ஒன்பதாம் ஆம் எண்ணில் வருகிறது. மேஷம், விருச்சிக ராசிக்கு 9 ஆம் எண் வரும். மேஷ ராசி என்பது நெருப்பு கிரகம். விருச்சிக ராசி நீர் கிரகம். நெருப்பு அதிகமாக இருந்து நீர் ஊற்றினால் அணைந்துவிடும். சில இடங்களில் போர்க் குணம் கொண்ட கிரகம் செவ்வாயை அடக்குவது விருச்சிக ராசியாக இருக்கும். எட்டாம் இடத்துக்கு விருச்சிகம் வருவதால் மேஷ ராசியை அடக்குவது விருச்சிக ராசியாக இருக்கும்.
விருச்சிகம், மேஷம் இரண்டுமே ஒன்பதுக்கு அதிபதி. செவ்வாய் ஆதிக்கம் உள்ள ராசிகள். எனவே, நாட்டில் போர் நடக்கக்கூடிய வாய்ப்புகள் வரும். மக்களை பாதிக்கக்கூடிய போரை 2025 ஆம் ஆண்டில் நடத்தாமல் இருப்பது நல்லது. விருச்சிகம், மேஷ ராசிக்காரர்கள் திடீரென கோபப்படுவார்கள். திடீரென அமைதியாகிவிடுவார்கள். அதுபோல, ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் பிரச்னை வரும்போது இன்னொரு நாடு அணைக்க வேண்டும். இல்லையெனில் அது உலகப் போராக வாய்ப்புள்ளது.
2025 ஆம் ஆண்டில் செவ்வாய் ஆதிக்கம் இருப்பதால் நாட்டின் அதிபர்கள், மக்கள் ஒருவர் ஒருவருடன் இணக்கமாக இருப்பது நன்மை பயக்கும். இது 2025 ஆம் ஆண்டுக்கான பொதுப் பலன்கள். 1 முதல் 5 ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். பிறந்த தேதி, மாதம் தெரியாதவர்கள் தங்களுடைய பெயரை கூட்டிப் பார்த்து பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
1 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்: பொதுவாக 1 என்பது சூரியன். 1, 19, 10, 28 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருப்பார்கள். சூரியனுடைய சக்தி மண்ணில் விழுந்தால் தான் உயிர்கள் பிறக்கும். 1 ஆம் தேதியில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தன்னலமற்றவராக இருப்பீர்கள். உங்களுடைய பேச்சு மற்றவர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். உங்களுடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். தோல்வியைக் கண்டு துவலமாட்டீர்கள்.
2025 ஆம் ஆண்டு 9 ஆம் எண்ணில் ஆரம்பிக்கிறது. 1 ஆம் எண்ணும் 9 ஆம் எண்ணும் நட்பு கிரகம். இதுவரை நீங்கள் இழந்த பொருள்கள் திரும்ப கிடைக்கும். உங்களுடைய அனைத்து கனவுகளும் நனவாகும். வீடு, கார் அனைத்தும் வாங்குவீர்கள். தாய், தந்தையின் சொல்லைக் கேட்டு மதித்து நடப்பது நல்லது. 2025 இல் உங்களுக்கு மிகப் பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது.
2 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்: 2, 11, 20, 29 இந்த எண்களில் பிறந்தவர்கள் சந்திரனுடைய ஆதிக்கம் பெற்றவர்கள். 15 நாள் தேய்வார்கள். 15 நாள் வளர்வார்கள். 15 நாட்களுக்கு வாழ்க்கை பிரகாசமாக, சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மனசு மற்றும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். அடுத்த 15 நாள்கள் எதிராக இருப்பார்கள்.
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2025 புத்தாண்டு பொற்காலமாக இருக்கும். 1 ஆம் தேதியில் பிறவி எண்ணில் புத்தாண்டு பிறந்து, கூட்டுத் தொகை 2 ஆக வருவதால் சூரியன் சந்திரன் கலந்திருக்கிறது. வெளிநாட்டு பிராயாணங்கள் கைகூடும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில் தொடங்குவீர்கள். வியாபார கூட்டாளிகள் மேலான சந்தேகம் தீரும். 15 நாள்கள் தேய்பிறையில் வரும்போது சந்திரனை நினைத்து தியானம் செய்வது நல்லது.
வியாபாரிகள், தொழில் செய்வோர், பைனான்ஸ் துறையில் இருப்போருக்கு நல்ல யோகம் உண்டு. பணம் படைத்தவர்கள் மேலும் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். வளர்ச்சிபெறும் ஆண்டாக உங்களுக்கு அமையும்.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்: மூன்றாம் எண் சக்திவாய்ந்த எண்ணாகும். மூன்று என்பது மூன்று சாமிகளைக் குறிக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மாவை குறிக்கும். மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அனைத்து துறையிலும் தலைமை தாங்குபவர்களாக இருப்பார்கள். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்களாகவும், குடும்பத்தின் மீது பற்று கொண்டவராகவும் இருப்பீர்கள். குரு என்பது ஜாதக பிரகாரம் தானகாரகன். மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை மிக அற்புதமாக இருக்கும் இந்த ஆண்டு. கூட்டுத் தொழில் இருப்பவர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கூட்டுத் தொழிலில் இருந்து விலகுவது நல்லது. சிட்பண்ட்ஸ், பைனான்ஸ், வட்டி வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது. திருமணம் கைகூடும், தடைபட்ட திருமணம் நடக்கும், புத்திர பாக்கியம் உண்டாகும். பகையான சொந்தங்கள் ஒன்று சேர்வார்கள்.
4 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்: சந்தேக நோக்கத்துடனே இருப்பவர்கள். எதிர்மறையான கண்ணோட்டத்துனேயே அனைவரையும் பார்ப்பீர்கள். 4 என்பது ராகு கிரகம். உருவத்தைப் பார்க்காமல் நிழலை பார்ப்பார்கள். நம்பி ஏமாந்துவிட்டேன் என்றே கூறுவார்கள். 4, 13, 22, 31 ம் தேதியில் பிறந்தவர்கள் வாழ்க்கை சந்தேகத்துடனே பார்த்து தெளிவடையும் புத்திசாலிகள். பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
நீதிபதிபோல நீதியைக் கொடுப்பவர்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள். 2025 ஆம் ஆண்டில் உங்களுக்கு விபரீத ராஜயோகம் உண்டாகும். அற்புதமான, அமைதியான, நிரந்தரமான யோகங்கள் அமையும். மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பீர்கள்.
5 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்: நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். மிகச்சிறந்த அறிவாளிபோல காட்டிக் கொள்வதற்காக ரிஸ்க் எடுப்பவர்கள். மற்றவர்களிடம் வசியம் செய்யக் கூடியவர்கள். பேச்சில், சிந்தனையில், செயலில் என வசியம் செய்யக்கூடியவர்கள். ஒருவரை நம்பிவிட்டால் கடைசி வரை நம்புவார்கள். அனைத்து எண்ணையும் கன்டிரோல செய்யக்கூடியவர்கள் 5 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்.
ஒழுக்கம், உண்மை, சத்தியம் தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பீர்கள். அரசாங்கத்துடனான தொடர்பு அதிகமாக இருக்கும். 2025 ஆம் ஆண்டு உங்களுடைய எதிர்காலம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதாவது திடீர் திடீரென நல்லது நடக்கும். தாழ்ந்து போகும் தன்மை கொண்டவர்கள். புகழுக்கு மயங்காதவர்களாக இருப்பீர்கள். குடும்பம், குழந்தைகள், உறவினர்கள் உங்களைப் போற்றுவார்கள். பொற்காலமாக உங்களுக்கு அமையப் போகிறது

Related Post