டெல்லி: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விரைவில் அதன் சோதனை ஓட்டம் தொடங்க இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பல வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அதே நேரத்தில் தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என இந்தியா முழுவதும் கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து அதற்கான பணிகளை ரயில்வே தொடங்கியது. இதற்கிடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முதல் ப்ரோட்டோ டைப் தோற்றத்தை கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய ரயில்வே வெளியிட்டது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதித்த பின் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு கூறியது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் நீண்ட மற்றும் நடுத்தர தூர பயணத்திற்காக அதே நேரத்தில், பயணிகளுக்கு சொகுசான பயணத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ரயில்களை அடிப்படையாகக் கொண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட காவாச் அமைப்பு மூலம் பெருமளவு விபத்துகளும் தவிர்க்கப்படும். மேலும் மொபைல் போன்களுக்கான சார்ஜிங் வசதி, நைட் லாம்ப், விஷுவல் டிஸ்ப்ளே, மேலே இருக்கும் இருக்கைக்கு செல்வதற்காக படிக்கட்டுகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னையில் தயாரிக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில்கள் ஐசிஎப் தொழிற்சாலையில் எழுந்து சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் இந்த ரயில்கள் கஜுராகோ மகா இடையே சோதனை செய்யப்பட இருப்பதாகவும், அதற்குப் பிறகு இவை மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மே இடையிலான காலகட்டத்தில் இந்த ரயில்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் கூறப்படுகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்: கவாச் கருவி, பாதுகாப்பான சொகுசான பயண அனுபவத்திற்கான சஸ்பென்சன்,
அதிக வசதியான பெர்த், மேல் பெர்த்துகளுக்கு அணுகுவதற்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏணி, EN-45545 HL3 தீ பாதுகாப்பு நெறிமுறை பாதுகாப்பு வசதி, ஷாக் ப்ரூஃப், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வடிவமைப்புடன் EN தமான கார் பாடி, ஆற்றல் மிக்க மீளுருவாக்க பிரேக்கிங் என்ஜினியரிங், மேம்பட்ட முடுக்கம், சிறந்த செயல்பாட்டு வேகம், ரயில் மேலாளர்/லோகோ பைலட்டுடன் பயணிகளை இணைக்கும் அவசர தொடர்பு அமைப்பு, கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் (PRM) கொண்ட பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வசதிகள், மையக் கட்டுப்பாடுகள் மற்றும் சீல் செய்யப்பட்ட கேங்வேகளுடன் தானியங்கி கதவு அமைப்பு,
ஏர் கண்டிஷனிங் மற்றும் சலூன் லைட்டிங், ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு, அனைத்து வண்டிகளிலும் பாதுகாப்பு கேமராக்கள் உள்ளிட்டவை இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உள்ளன.