மதுரை ரயில் தீவிபத்து: 9 பேரின் உடல்கள் சென்னை வருகை..

post-img

சென்னை: மதுரை ரயில் தீவிபத்தில் பலியான 9 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தற்போது சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கிருந்து இந்த உடல்கள் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து 65 க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுக்கு சுற்றுலா செல்ல கடந்த 17 ஆம் தேதி புறப்பட்டனர்.
சுற்றுலா ரயிலானது சில பெட்டிகள் அந்தந்த ரயில் நிலையங்களில் நிற்கும். அங்கு இவர்கள் தங்கள் உடைமைகளை வைத்துவிட்டு பின்னர் தாங்கள் பார்க்க செல்லும் இடங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும்அந்த ரயில் பெட்டிகளுக்கே திரும்புவர்.


அவ்வாறு திரும்பும் போது அவர்கள் அடுத்துசெல்ல வேண்டிய இடத்திற்கு அவ்வழியாக செல்லும் ரயிலுடன் இவர்களுடைய பெட்டிகள் இணைக்கப்படும். அந்த வகையில் இந்த சுற்றுலா ரயில் பெட்டிகள் புனலூர் அருகே சென்னைக்கு செல்லும் ரயிலுக்காக காத்திருந்தது. அப்போது நேற்று அதிகாலா 5.30 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.


மதுரை ரயில் விபத்து: 9 பேர் பலிக்கு முழுக்க முழுக்க என்ன காரணம்.. கொந்தளித்த மதுரை எம்பி
பயணிகளின் அலறல் சப்தம் கேட்டவுடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி போய் போலீஸாரை அழைத்தனர். அவர்களின் தகவலின்படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் 9 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். அதிகாலை டீ போட சிலிண்டரை ஆன் செய்த போது கேஸ் லீக்காகி அது வெடித்து தீவிபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் தலா ரூ 10 லட்சமும் தமிழக அரசு தலா ரூ 3 லட்சமும் நிவாரணம் அளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.


இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த உடல்கள் இன்று 3 ஆம்புலன்ஸ் வாகனங்களில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.15 மணிக்கு புறப்படும் விமானத்தில் 5 உடல்களும், 11.15 மணிக்கு புறப்படும் விமானத்தில் 4 உடல்களும் லக்னோ கொண்டு செல்லப்படுகிறது.

 

Related Post