பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. அவரின் மரணம் காரணமாக.. சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் நிகிதாவை பணியில் இருந்து நீக்க அசெஞ்சர் நிறுவனம் மறுத்து வருகிறது.
அவர் பணியிடத்தில் தவறு செய்தால் மட்டுமே பணியில் இருந்து நீக்க முடியும். வெளியே குடும்ப பிரச்சனைகளுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி செய்யும் பட்சத்தில் அசெஞ்சர் நிறுவனம் மீது நிகிதா வழக்கு தொடுக்க முடியும். இதன் காரணமாக அசெஞ்சர் நிறுவனம் இதுவரை நிகிதா மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் நிகிதா தற்போது தற்போது செய்யப்பட்டு உள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை போலீசார் கைது செய்தனர். அதோடு அவரின் அம்மா, தம்பியையும் கைது செய்தனர்.
இதையடுத்து அவரைத்தான் கைது செய்து விட்டார்களே.. ஏன் அவர் மீது ஆக்சன் எடுக்கவில்லை. நிகிதாவை இனி பணியில் இருந்து நீக்கலாமே என்று நெட்டிசன்கள் அசெஞ்சர் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து அதன் சிஇஓ ஜூலை ஸ்வீட் தனது ட்விட்டர் பக்கத்தை லாக் செய்துள்ளார். யாரும் தன்னை டேக் செய்து கேள்வி கேட்க முடியாத அளவிற்கு லாக் செய்துள்ளது.
என்ன நடந்தது?: அதுல் சுபாஷுக்கு கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. மனைவி, மாமியார், ஆண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள் மற்றும் சிஸ்டம் காரணமாக திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
மனைவி 3 கோடி ஜீவனாம்சம் கேட்டார். அதோடு 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு தொகை கேட்டார். மனைவி தன் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை. ஜான்பூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கௌசிக், வழக்கைத் தீர்ப்பதற்கு 4- 5 லட்சம் லஞ்சம் கோரினார்.
மனைவியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக தனது மனைவிக்கு பல லட்சங்களைக் கொடுத்துள்ளார், ஆனால் கடைசியில் வரதட்சணைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். சுபாஷின் மனைவியின் தந்தை திருமணமான உடனேயே நோயால் இறந்தார், ஆனால் தனது கணவர் "வரதட்சணை" கேட்டதால்தான் என் அப்பா அதிர்ச்சியில் இறந்ததாகக் கூறி அந்த பெண் அவரது குடும்பத்தினர் மீது கொலைப் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.
நிகிதா பின்னணி: நிகிதா சிங்கானியா பல லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அதே சமயம் அவர் தனது கணவர் அதுல் சுபாஷிடம் விவகாரத்தின் போது 3 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். மேலும் 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு கேட்டு கோர்ட் மூலமாக 2 லசித்தம் ரூபாய் பராமரிப்பு பெற ஒப்புக்கொண்டுள்ளார்.
இதெல்லாம் போக கணவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளார். கணவரை கடந்த சில வருடங்களாக கடுமையாக கொடுமை செய்துள்ளார். இதனால் கணவர் தற்போது தற்கொலை செய்து கொண்ட நிலையில் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.